Header Ads



மஹியங்களை பள்ளிவாசல் தாக்குதல் - அல்லாஹ்வின் தண்டனை நிச்சயம் கிடைக்கும்

(மௌலவி எம். எச். ஷைஹுத்தீன் மதனி)

11.07.2013 இரவு 11.20 அளவில் மஹியங்கனை அரபா ஜும்ஆப் பள்ளிவாசல் இனந்தெரியாத காடையர்களால் அடித்து நாசமாக்கப்பட்டது மட்டுமல்லாமல் முஸ்லிம்களது மார்க்கத்தில் முற்று முழுதாக தடை செய்யப்பட்ட பன்றியை அறுத்து அதன் பாகங்களையும் இரத்தத்தையும் புனித பள்ளி வாசலினுள் வீசி அசிங்கப்படுத்திய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இச்சம்பவம் இலங்கை முஸ்லிம்களை மாத்திரம் அல்ல உலக முஸ்லிம்கள் அனைவரையும் புண்படுத்தியுள்ளது. புனித ரமழான் மாதம் என்று கூட பார்க்காமல் இந்த அராஜக செயலைச் செய்தவர்களை கண்டு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி ஆகக் கூடிய தண்டனை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன் வர வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படுகிறதோ இல்லையோ புனித ரமழானை மதிக்காத அப்படுபாவிகளுக்கு அல்லாஹ்வினால் கடும் தண்டனை விரைவில் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

எல் ரீ ரீ ஈ பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் ஒரு சில சிங்கள பயங்கரவாதம் தலை தூக்கி இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்கி மீண்டும் ஒரு பயங்கரவாதத்தை இந்நாட்டில் விதைக்க எத்தனிக்கின்றது. எனவே இச்சதிகாரர்களின் சதியில் சிக்கி விடாமல் முஸ்லிம்கள் ஒற்றுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் நடந்து கொள்வதோடு தினமும் இப்பயங்கரவாதிகளினது சதியிலிருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 

இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுத்து இன்றைய ஜும்ஆத் தொழுகையை நடாத்த உதவிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான அல் ஹாஜ் ரவுப் ஹக்கீம், மற்றும் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல் ஹாஜ் என்.எம் அமீன் அவர்கள், மற்றும் ஊவா மாகாண காணி அமைச்சர் அனுர விதானகமகே அவர்கள், மற்றும் இப்பள்ளி வாசலுக்காக அயாராது தினமும் உழைக்கின்ற தொழிலதிபர்களும் சமூக சேவையாளர்களுமான அல் ஹாஜ் சுலைமான் அல் ஹாஜ் சீனி முஹம்மத் மற்றும் மஹியங்கனை முஸ்லிம் கடை உரிமையாளர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

7 comments:

  1. தயவு செய்து இந்த செய்தியை அரபு மொழியல் மொழிபெயர்த்து ஊடகங்களுக்கு அறியத்தரவும். அத்துடன் பதுளை மாவட்ட ஜும்மா பள்ளிவாயில்களின் நிர்வாக சபைகளினூடாக இவ்வநியாயக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் படிவேண்டி தொலைநகல்களை ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளர்க்கும் அனுப்பிவைக்க ஏற்பாடுகளை பண்ணவும்.
    இந்த விடயத்திலாவது உரிய பொறுப்பு தாரிகள் முன்வந்து செயல் பட்டு முஸ்ல்ம்களின் தனித்துவம் காக்கவும் ஏனைய பள்ளி வாயில்களை இதுபோன்ற ஈனச் செயல்கள் நடைபெறாது பாதுகாக்க முன்வரவும்.

    ReplyDelete
  2. இந்த நிகழ்வு இறுதித்துதர் இறைவனை தொழுதுகொண்டிருந்தபோது ஒட்டகத்தின் குடல்களை கழுத்தில் போட்ட சம்பவத்தையும் அவர் சென்ற பாதையில் குப்பை கொட்டிய மூதாட்டியின் சம்பவத்தையும் நினைவூட்டுகிறது. முஸ்லீம் சகொதரர்களே, முடியுமானால் இருந்து பாருஙகள், கவனமாக அவதானியுங்கள், மகியங்கண பிரதேசத்தில் இன்றைக்கு பிறகு சிலருகு சில விடயங்கள் நடகும். காரணம் புரியாமல் தடுமாற்வார்கள். செய்திகளை வெளிப்படுத்த வெற்கப்படுவார்கள். நிச்சயம் பள்ளிக்குள் பண்றியின் பாகங்களை இரத்ததுடன் வீச திட்டமிட்டவன் முதல் வீசியவன் வரை இழிவுபடுத்தப்படுவான். அல்லது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள். இந்த ரமழானில் எமது துஆக்களுக்கூள்ள பெறுமதியை இவர்கள் உணரமாட்டார்கள். துஆ செய்வோம். அல்லஹ் எம்முடன் இருக்கிறான்

    ReplyDelete
  3. இலங்கையில் உள்ள அணைத்து பள்ளிவாசல்களுக்கும் அரசாங்கம் போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்

    ReplyDelete
  4. முதலில் நாம் முஸ்லிமாக இருக்கனும்(குர்ஆன் ஹதீஸ் பேசுபவர்களையும் அவர்களின் நடவடிக்கைகளைப்பார்த்து காபிர்கள் போன்று அவர்களை தாக்குவதையும் நிறுத்தவும்)அல்லாஹ் வேறு ஒரு சமூகத்தை தேர்ந்தெடுக்க முன்பு விழிப்படையுங்கள்.,அக்குறணையில் தொடர்ந்து நடக்கும் அடாவடித்தனங்கள் போன்று இலங்கையில் பல பாகங்களில் தாக்குதல்கள் நடக்கின்றது ஆக அல்லாஹ் தண்டிப்பதானால் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இந்த நடிகர்களாகிய இவர்களைத்தான் இஸ்லாத்தில் ஒன்றமே தெரியாத அவர்களையா தண்டிப்பான் தெரிந்தும் தெரியாதது போன்று நடித்துக்கொண்டிருக்கும் இவர்களையா?...?....?....?

    ReplyDelete
  5. Please tell to that MP Azwar about this incident. He might say in parliament that no masjids were attacked in the country. May Allha protect all Mulims.

    ReplyDelete
  6. මෙවැනි ම්ලේච ක්රි්යාවලින් ඉස්ලාම් ධර්මය නැති කරන්නට හෝ, ඉස්ලාම් ධර්මය පැතිරවීම නවත්වන්නට හෝ කිසිදාක කිසි කෙනෙකුට කිසිසේත්ම හැකිවෙන්නේ නෑ. මොවුන්ට ලැබෙන්නට තියෙන දඬුවම නැතිකරන්නද කිසිම කෙනෙකුට බෑ. මෙම සත්ය ය ඉස්ලාම් විරෝධී පුද්ගලයන්, සංවිධාන, ඔවුන්ට රැකවරණය දෙන සියලු පාක්ෂයින් හැකි ඉක්මනින් අවබෝධ කරගන්නවානම් ඒ යහපත ඔවුන්ටයි. ඉස්ලාම් ධර්මයට කිසිම අලාබයක් නෑ. එයට රැකවරණය, මැවූ අල්ලහ්ගෙන් නිසැකවම තිබෙනවා.

    ReplyDelete
  7. This game from government, i think they trying to increase any items that's why they tried to racism. that's the trick of government. most peoples don't know that.

    ReplyDelete

Powered by Blogger.