Header Ads



புல்மோட்டை கடற்பரப்பில் சிக்கிய இராட்சத திருக்கை மீன் (பிரத்தியேக படங்கள்)

(முஹம்மது றினாஸ்)

புல்மோட்டை கடற்பரப்பில் வலை மூலமாக மீன் பிடிக்க சென்ற படகு ஒன்றின்  தற்பாதுகாப்புக்காக கடலுக்குள் விடப்பட்ட நங்கூரத்தில் இராட்சத திருக்கை மீன் சிக்கியது.

7 மீற்றர் அகலமும் 4 மீற்றர் நீளமும் கொண்ட இந்த மீன் ஏறத்தாள 800 கிலோ கிராமுக்கு அதிகமான  நிறையை கொண்டிருக்குமென்று கணிக்கப்படுகின்றது. 

புல்மோட்டை 04 ம் வட்டாரத்தைச் சேர்ந்த முபாறக் என்பவரின்  மீன் பிடி படகின் நங்கூரத்தில் இந்த மீன் அகப்பட்டு மூன்று படகுகளின் உதவியுடன் கரைக்கு  கொண்டுவரப்பட்ட பின்னர் உழவு இயந்திரம் மூலமாக தரைக்கு இழுத்துவரப்பட்டது. இதன் பெறுமதி சுமார் 190000 ரூபாவாக விலை மதிக்கப்பட்டுள்ளது.   


No comments

Powered by Blogger.