Header Ads



அம்பாறை மாவட்ட பத்திரிகைகள் விற்பனை முகவர்களுக்கான விஷேட கூட்டம்,


(எம்.பைஷல் இஸ்மாயில்)

அம்பாறை மாவட்ட தமிழ்த்தந்தி பத்திரிகைகள் விற்பனை முகவர்களுக்கான விஷேட கூட்டமும், இப்தார் நிகழ்வும் 5.00 மணியளவில் (2013.07.17) மாளிகைக்காடு பிஸ்மில்லாஹ் ஹோட்டல் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பிரஜைகள் முண்னணியின் செயலாளர் நாயகமும், சக்தி ரீவி பணிப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ஸ்ரீ.ரங்கா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட திருக்கோவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, மீனோடைக்கட்டு, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனைக்குடி, மருதமுனை, சம்மாந்தறை மற்றும் கல்முனை ஆகிய பிரதேங்களில் உள்ள பத்திரிகை முகவர்கள் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 



No comments

Powered by Blogger.