முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக பதிலடி கொடுக்கும் நிலை
(இக்பால் அலி)
இன்று முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு அறிவியல் ரீதியாக மாத்திரமே பதிலடி கொடுக்க வேண்டிய நிலை உள்ளன. . இதற்கு அஹதிய்யாப் பாடசாலை தொட்டு அனைத்து கல்வித் துறை சார் நிறுவனங்கள் யாவும் கவனத்தில் கொள்ள வேண்டிய மிகவும் கட்டாயமான தேவைப்பாடுடைய காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கிறோம் என்று சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான தலைவர் அஸ்nஷய்க் இம்ரான் தெரிவித்தார்.
கதிரவலான அல் அஸ்ஹர் அஹதிய்யாப் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை முற்றத்தில் அஹதிய்யாப் பாடசாலை அதிபர் முஹமட் றாசிக் தலைமையில் நடைபெற்றது அந்நிகழ்வில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்ட சர்வதேச இஸலாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கான தலைவர் அஸ்ஷய்க் இம்ரான் அங்கு இவ்வாறு இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இந்த அஹதிய்யாப் பாடசாலை மாணவர்களுக்கிடையே இஸ்லாமிய மார்க்கம் சமந்தமான விடயங்களைப் போதிப்பதுடன் சிறந்த அறிவியல் வழிகாட்டல்களையும் வழங்குதல் அவசியமாகும். அத்துடன் சிறார்களுக்கு நல்ல ஒழுக்க விழுமியங்களையும் வழங்குதல் வேண்டும்.. சிறந்த ஆற்றல் மிக்க சிறார்களை இந்த மாதரியான அஹதிய்யாப் பாடசாலைகள் மூலம்தான் மாணவர்கள் வெளிக்கொரண முடியும். எனவே இதற்கு பெற்றோர்களாகிய நாங்கள் மாணவர்களை இப்பாடசாலைக்கு அனுப்பி வைப்பதோடு அவர்களுடைய முயற்சிகளுக்கு நல்லாதரவும் பங்களிப்பும் நல்ல வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜாமியா நளீமிய்யா சிரேஷ;ட விரிவுரையாளர் அஷ;nஷய்க் எஸ். எச்.எம் பழீல், குருநாகல் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சஹாப்தீன் சரீப், குருநாகல் பிரதேச சபை உறுப்பினர் எஸ். யூ. ஏ. கியாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment