Header Ads



மன்னாரில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு இராணுவத்தினரும் தடையா..?

மன்னார் முசலி பிரதேசத்திற்கு உட்பட்ட மரிசுக்கட்சி - சிலபாத்துறைக்கும் இடையே முஸ்லிம்களை மீள்குடியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இராணுவத்தின் நேரடித் தலையீடு காரணமாக உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பிரதேச முஸ்லிம் அரசியல் பிரமுகர் ஒருவர் எமக்கு தகவல் தருகையில்,

1990 ஆம் ஆண்டு தமது பாரம்பரிய தாயகப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பாசிசப் புலிகளினால் இனச்சுத்திகரிப்பு செய்யப்பட்டிருந்தனர். புலிகள் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்கள் அங்கு படிப்படியாக மீளக்குடியேறிவருகின்றனர். அவ்வாறு மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்குரிய காணிகள் அங்கு போதியளவு இல்லை.

இதனால்  மரிசுக்கட்சி - சிலபாத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் காணியற்ற முஸ்லிம்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டு, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து அப்பகுதியில் மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்பொருட்டு அங்கு குடியேறவிருந்த முஸ்லிம்கள் தாம் குடியேறவிருக்கும் பகுதியை நோன்பு பிடித்தவர்களாக, கனவுகளை சுமந்தவர்களாக அப்பகுதியை சுத்தம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு திடீரென வந்துள்ள இராணுவத்தினர் இந்த இடத்தை விட்டுவிடுங்கள், அந்தப் பகுதி எமக்கு தேவை. இது பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோட்டபய ராஜபக்ஸவின் உத்தரவு என கட்டளையிட்டுள்ளனர்.

இதனால் ஏமாற்றமடைந்துள்ள அப்பகுதி முஸ்லிம்கள் தாம் மேற்கொண்டுவந்த சத்தமாக்கும் பகுதியை தற்போது இடைநிறுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தும் நோக்குடனே இராணுவத்தினர் இவ்வாறு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் தடைகளை ஏற்படுத்துவதாகவும்,அன்று பாசிசப் புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட்டார்களோ அதுபோன்று தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக இராணுவத்தினரும் செயற்படுகிறார்களோ என்று சிந்திக்கத் தோன்றுவதாகவும் அப்பகுதி அரசியல் பிரமுகர் தமது கவலையை வெளிப்படுத்தினார்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Powered by Blogger.