Header Ads



அமைச்சர் அதாஉல்லாஹ் மீதான காழ்ப்புணர்ச்சி, தமது பதவிகளை ஸ்திரப்படுத்தி கொள்வதேற்கே!

அண்மைக்க்காலமாக ஊடகங்களில் வருகின்ற அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான அமைச்சர் அதாஉல்லாஹ் தொடர்பான, சமூகத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டார். பேரினவாதத்துககு துணைபோய்விட்டார் என்கிற செய்திகளை பார்க்கின்ற போது தங்களது பதவி நிலைகளை ஸ்திரப்படுத்தி கொள்ளும் இடைநிலை அரசியல் வாதிகள் அமைச்சர் அதாஉல்லாவின மீது காழ்ப்புணர்ச்சி   கொள்வதையே சுட்டி நிற்கிறது. இது சமகால முஸ்லீம் அரசியலின் காத்திரமான போக்குக்கும், ஸ்திரமான தன்மைக்கும் உகந்ததல்ல என இழப்பீட்டு ஆய்வு மையத்தின் 5ம் வருட நிருவாகிகள் தெரிவும் கருத்தரங்கும் அண்மையில் மையத்தின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான ஆதம்வெல்லை அஹமட் தலைமையில் தெஹிவளையில் இடம் பெற்றபோது அதன் தலைவரும் மாநகரசபை உறுப்பினருமான அஸ்மி.ஏ.கபூர் தெரிவித்தார்.   

மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்ளுடைய காலம் யுத்தம் இடம் பெற்றுக் கொண்டிருந்த காலமாக இருந்தது. தமிழர்களுடைய பிரச்சினைகளைக்கு தீர்வாக இணைந்த வடககு; கிழக்கு மாகாணங்களில் தீர்வுவழங்கும் போது அதில் முஸ்லீம்களின் நிலை தொடர்பாக தெளிவுபடுத்தி இருந்தார். 
  
யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அததிகளாக்கப்பட்டு சொந்த மண்ணை கூட 20 வருடங்களுக்கு மேலாக செனறு பார்க்கமுடியாமல் இருந்த முஸ்லீம்களை தனித்தரப்பாக சமாதன பேச்சு மேசையில் அமர்த்த கோரிக்கை விடுத்த போது அரச தரப்பின் அங்கமாக சென்றது எந்த தலைமை என்பது தெரியாமல் விட்டிருக்க சந்தர்ப்பமில்லை.   

மேலும் ஒவ்வொரு தேர்தல்களின் போது உணர்ச்சி பூர்வமான ஒரு விடயத்தை முன்னிருத்தி அதன் மூலம் வாக்குகளை பெற்று பின்னர் பழைய நிலைக்கு சென்று விடுவதென்று தொடர்ச்சியாக முஸ்லீம்கள் பாடம் கற்றுக்கொண்டு விட்டார்கள்.   

இப்போது அமைச்சர் அதாஉல்லாஹ் என்ன பேசுகிறார், அதற்கு நாம் என்ன பதிலளித்தால் முஸ்லீம்களின் வாக்குகளை பெறலாம் என்கின்ற ஒருவகையான மாயையை அரசியலில் புகுத்தி அதன் மூலம் அரசியல் களம் காண சிலர் முற்படுகினற்னர்.   

இது தவிர முஸ்லீம்களின் விடயத்தில் தங்களது நிலைப்பாட்டை முன்வைக்க தவறிவிடுகின்றர். 13வது திருத்த சட்ட மூலம் தொடர்பாக தங்களது கருத்தை ஊடகங்களுக்கு முன்வைக்க தவறுகின்றனர். அதில் உள்ள விடயங்களை மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தத் தவறுகின்றனர். வெளிநாட்டு சக்திகள் இலங்கை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுத்துகின்றன? பள்ளிவாசல் உடைப்பு, பொதுபலசேன போனற் அதிதீவர பேரினவாதிகளின் வருகை, என்பனவற்றை பேச மறந்து விடுகிறார்கள். தங்களுக்கே அர்த்தம ; புரியாமல் திவிநெகும சட்ட மூலத்ததுக்கு ஆதரவாக வாகக் ளித்ததை கணக்கில் எடுத்து கொள்வதுமில்லை. இவ்வாறு பலதரப்பட்ட முக்கிய விடயங்களை பேசுவதை விட்டு முஸ்லீம்கள் பெரும் பாணi; மயாக ஜனாதிபதிக் கெதிராகதான் வாக்களித்தார்கள் என்றால் அது சமூகத்தை காட்டிக் கொடுத்துவிட்டார் என்று பொருளாகுமா?  

வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லீம்களின் நிலை தொடர்பாக சரியான சந்தர்ப்பங்களின் நிலைமைகளை முன்கூட்டியே புரிந்து கொண்டு முடிவுகள் மேற்கொண்டது. யார் என்பதை நாம் கூறவேண்டிய அவசியமில்லை.  வடகிழக்கின தற்காலிக இணைப்பை பிரித்து கிழக்கை தனி மாகாணமாக்கி இன்று சுதந்திர கிழக்கில் முஸ்லீம்கள் பெருயாக நிம்மதியாக வாழவைத்து யார்?   

4 comments:

  1. உங்களைப்போல் பதவிகளுக்கு சலுகைகளுக்கும்.ஜால்ரா அடிக்கும் ஒரு கூட்டம் முஸ்லிம்கள் மத்தியில் உள்ளவரைக்கும்.பள்ளிவாயல்களுக்குள் பண்டி இறைச்சி வீசுவது என்ன,இலங்கையில் உள்ள பள்ளிவாயல்கள் எல்லாம் பண்டி அறுக்கும் மடுவங்கள் ஆக்கும்.இவர்களை போல் காட்டிக்கொடுக்கும் கயவர்களிடமிருந்து உலக வாழ் முஸ்லிம்களை பாதுகாத்து அருள்வாயாக!யா அல்லாஹ்

    ReplyDelete
  2. அதாஉல்லா ஓரளவு நல்லது செய்தாலும்,

    அவரோடு இருக்கும் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை எப்போதாவது நல்லது செய்துள்ளாரா?

    இதை அவர் என்னிடம் சொல்லட்டும். மக்களுக்கோ அல்லது ஊருக்கோ ஏதாவது நல்லது வந்தால் அதை தடுக்கும் ஒருவராகவும், முட்டுக்கட்டை போடும் ஒருவராகவே காணப்படுகின்றார். இதை அவர் இல்லை என்று அவரின் நெஞ்சில் கையை வைத்துச் சொல்வாரா...............???

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் எப்படி ஒருவரை மட்டும் குற்றம் சொல்வீர்கள் இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.அதாவுல்லா அபிவிருத்தி என்ற பெயரில் நாய்க்கு எச்ச எலும்புகளை போடுவது போல் போடுகின்றார்.இவர்கள் இருவரும் அமைச்சர் ஆன பிறகு சேர்த்த சொத்துகளுக்கு கணக்கு காட்டுவார்களா?இவரகள் இருவரும் சமுகத்துக்காக என்ன செய்தார்கள்?மகியங்கனை பள்ளி சம்பவத்தை வைத்து அரசை விட்டு வௌியேற முடியுமா? முடியாது அவ்வளவும் ஊழல்.உள்ளே போய் விடுவோம் என்ற பயம்.

      Delete
  3. சகோதரர் Mohamed Wareef.

    அதாவுல்லா பல ஊருக்கும் நல்லசேவை செய்துள்ளார் அந்த வகையில் நாம் ஒருவரும் அவருக்கு அநியாயம் சொல்லக்கூடாது. இறைவன் ஒருவன் எல்லாவற்றையும் பார்த்தவண்ணமுள்ளான். அதாவுல்லா செய்தளவுக்கு வேறு எந்த அரசியல்வாதி நமக்கு செய்த்துள்ளார்கள் அதை சுட்டிக்காட்டுங்கள் நான் சரியாக இருக்குமிடத்து அதை ஏற்றுக்கொள்கின்றேன்.. யாரோ சொன்னார்கள் என்பதற்காக ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அதே வார்தையைப்பிரயோகிப்பீர்கள், இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நான் சர்வசாதாரணமாக ஒருவரை குறை கூறலாம் அது எந்தளவு உண்மை என்பதை பார்க்காமல் வாய்க்கு வந்தவாறு வார்த்தைகளை விடுது ஒருபோதும் கூடாது ஒருவரைப்பற்றி பேசும்போது அவர் செய்தவைகளை மறந்து பேசக்கூடாது செய்யாத காரியங்களைப்பற்றி கேளுங்கள் நேருக்கு நேர் நின்று சண்டையிடுங்கள் அதை வரவேற்கலாம். மஹியங்கணை பள்ளிவிடயம் சம்பவத்தைவைத்து அரசைவிட்டு யாரும் எதற்கு வெளியேறவேண்டும் அரசுடன் இருந்துதான் அதற்கு சரியான பாடம் கற்பிக்க முடியும், சகோதரரே நாம் நினைப்பதைப்போல தலைவர்கள் திடீரென எடுத்ததெற்கெல்லாம் அரசைவிட்டு வெளியேறப்போகின்றேன் என்று பகடைக்காய காட்ட முடியாது இந்த அரசாங்கத்தின் நிலை தெரியாமல் பேசிக்கொண்டிருக்கும் உம்மைப்போன்ற பலருக்கு தெரியவேண்டிய விடயங்கள் பல உள்ளன அவைகள் சொல்லிக்கொண்டிருக்கும் காரியங்களல்ல. எதிர்த்து போராடும் இடங்களும் உள்ளன நட்புடன் வெல்லவேண்டிய காரியங்களும் உள்ளன அவைகள் இருக்க யாவரும் பேசும்போது சற்று சிந்தித்துபேசுங்கள் இறைவன் நமக்கு நல்லதை அருள்வானாக...

    ReplyDelete

Powered by Blogger.