Header Ads



முஸ்லிம்கள் அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும் - யாழ்ப்பாணத்தில் அமைச்சர் மேர்வின்


(பாறூக் சிகான்)

யாழ்ப்பாண முஸ்லீம்கள் தற்போது எதிர்கொள்ளும்  பிரச்சினை குறித்து மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு மகஜர் ஒன்றினை சின்ன முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் வைத்து  யாழ் முஸ்லீம் சிவில் சமூக பிரதிநிதிகள் கையளித்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

முஸ்லீம் மக்களுக்கு தேவையான அவசியமான தேவைகளை இயன்ற வரை நிறை வேற்றித்தருவதாகவும் இதற்கு தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பினை யாழ் தலைமை பொலீஸ் பொறுப்பதிகாரி சமன் சிகேரா மற்றும் 512 ஆவது இராணுவ கட்டளை தளபதி கேணல் பல்லேகல  ஆகியோர் ஏற்பாடு செய்தனர். மேலும் இச்சந்திப்பில் அமைச்சருடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வட மாகாண வேட்பாளர் எம்.சிராஸ், சட்டத்தரணி முறியப்பு ரெமிடியஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.