Header Ads



அக்குறணை பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறப்புவதற்கு துரிதப்படுத்துங்கள்

(அப்துல் கபூர்)

கங்கா முஹ்சின் ஹாஜியாரின் மரணத்தின் பின்னர், அக்குறணை பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு அடுத்தபடியான அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ள இர்பான் காதர் அவர்களை நியமிப்பதற்கு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பு முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் அவர்களிடம் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அக்குறணையின் சில முக்கிய உலமாக்களின் மத்தியஸ்தத்துடன், நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு கடந்த பிரதேச சபைத் தேர்தலை எதிர்கொண்டது. தேர்தல் முடிவுகளின் பிரகாரம், முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் 3 அங்கத்தவர்கள் வெற்றி பெற்றனர். கங்;கா முஹ்சின் ஹாஜியார் 3466, இஸ்திஹார் 1942, இன்ஜினியர் சிராஜ் 1760 ஆகியோர் வெற்றி பெற்றதுடன், அடுத்தபடியாக இர்பான் 1719, மிஹ்லார் 1130, மவ்சூப் 976 வாக்குகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

கடந்த 16ம் திகதி காலமான, அக்குறணை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கங்கா முஹ்சின் ஹாஜியாரின் வெற்றிடம் இன்னமும் நிறப்பப்படவில்லை. எனவே, அடுத்த அதிகூடிய வாக்குகளைப் பெற்றுள்ளவர் என்ற வகையிலும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலும், இர்பானின் நியமணத்தை அவசரமான மேற்கொள்ளக் கூறியே மேற்படி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இவ்விடயம், நீதியமைச்சர் ரவூப் ஹகீம் அவர்களது கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நீதிக்கும் அபிவிருத்திக்குமான மக்கள் அமைப்பின் (PMJD) பிரதிநிதித்துவம் விருப்புரிமை வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டும்.

    நீதி அமைச்சரே நீதியில் தவறிவிடக் கூடாது. நீங்களே ஒப்பந்தத்தை மீறி விட்டு ஹிஸ்புல்லாவின் ஒப்பந்த மீறலைப் பற்றி வாய் திறக்கக் கூடாது.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இந்த விடயத்தில், நீதி அமைச்சர் நீதியாக நடந்துகொள்வாரா?
    ஏனென்றால், சிலர் சில இடங்களுக்கு வருவது, சிலருக்குப் பிரச்சினையல்லவோ...

    ReplyDelete

Powered by Blogger.