காத்தான்குடியில் டெங்குப் பரிசோதனை நடவடிக்கைகள்
காத்தான்குடி நகரசபை, காத்தான்குடி பொலிஸ் நிலையம், காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், காத்தான்குடி பிரதேச செயலகம் என்பன இணைந்து மட்டக்களப்பு காத்தான்குடி நகரசபை பிரிவில் ஆட்கொல்லி டெங்கு நுளம்புகள் அடையாளம் காணப்பட்ட பிரதேசங்களில் இன்று புதன்கிழமை டெங்கு பரிசோதனைகள் மற்றும் டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த டெங்கு விழிப்புணர்வு வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் 17-7-2013 காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது அஷ்ஷூஹதா வீதி, சாவியா வீதி, ஊர் வீதி, செயினுலாப்தீன் வீதி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் பொது இடங்கள், காணிகள் பரிசோதனை செய்யப்பட்டதுடன் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வும் செய்யப்பட்டது.
மட்டு காத்தான்குடிப் பிரதேசத்தில் ஆட்கொல்லி டெங்கு நோய் தொடர்பான பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment