யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதிய கல்வியாண்டில் 1755 மாணவர்களை அனுமதி
(ஏ.எல்.ஜுனைதீன்)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்
2012 / 2013 ஆம் புதிய கல்வியாண்டில் 1755 மாணவர்களை அனுமதிப்பதற்கு பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழு உத்தேசித்திருக்கிறது.
இப் பல்கலைக்கழகத்திலுள்ள கற்கை
நெறிகளும் ஒவ்வொரு கற்கை நெறிக்கும் அனுமதிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள
மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய விபரமும் வருமாறு:-
|
கற்கை நெறி
|
மாணவர்களின்
எண்ணிக்கை
|
|
மருத்துவம்
|
125
|
|
இயந்திரவியல்
|
50
|
|
விவசாயம்
|
75
|
|
உயிரியல் விஞ்ஞானம்
|
125
|
|
பெளதிக விஞ்ஞானம்
|
300
|
|
முகாமைத்துவம்
|
300
|
|
வணிகவியல்
|
50
|
|
கலை
|
500
|
|
சட்டம்
|
50
|
|
சித்த மருத்துவம்
|
50
|
|
கணனி விஞ்ஞானம்
|
50
|
|
தாதியியல்
|
30
|
|
மருந்தகவியல்
|
25
|
|
மருத்துவ ஆய்வுகூட 1755விஞ்ஞானங்கள்
|
25
|
|
மொத்தம்
|
1755
|
இலங்கையிலுள்ள 14 தேசியப்
பல்கலைக்கழகங்கள் 03 வளாகங்கள் மற்றும் 05 நிறுவகங்கள் என்பனவற்றில் 2012 / 2013
ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டில் மொத்தமாக 23,125 மாணவர்களை அனுமதிப்பதற்கும்
உத்தேசிக்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர
பல்கலைக்கழகத்தில் ஆகக்கூடுதலான எண்ணிக்கையாக 2660 மாணவர்களும் ஊவா வெல்லஸ்ஸ
பல்கலைக்கழகத்தில் ஆகக்குறைந்த எண்ணிக்கையாக 605 மாணவர்களும் அனுமதிக்கப்படவிருக்கிறார்கள்.
இதேவேளை, கடந்த 2011 / 2012
கல்வியாண்டில் ஆகக்கூடுதலாக 28,908 மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் பட்டப்பயில்
நெறிகளுக்கு அனுமதிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தான் வெளியிட்டுள்ள புள்ளி விபர அறிக்கை
ஒன்றில் தெரிவித்துள்ளது.
கடந்த கல்வியாண்டில் மொத்தமாக
22,110 மாணவர்களையே பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பது என ஆணைக்குழு உத்தேசித்திருப்பதாக
அறிவித்திருந்தது. ஆனாலும் அதன் உத்தேசத் தொகையை விட 6798 மாணவர்கள் கூடுதலாக
அனுமதித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

Post a Comment