சாய்ந்தமருது பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி டிப்ளோமா பாட நெறி
(இஷாக்)
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் அங்கீகாரத்தோடு சாய்ந்தமருது கொம்டெக் நிறுவனம் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கல்வி டிப்ளோமா 2013 பாட நெறியை இன்று சனிக்கிழமை (08) ஆரம்பித்து வைத்தது.
நறுவனத்தின் பணிப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடை பெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார் .
நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் உட்பட கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் , கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் ,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் உட்பட முன் பள்ளி ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
பாலர் பாட சாலை ஆசிரியர்களுக்கான் கல்வி டிபுளமா 2013 பாட நெறி கை நூலும் அங்கு வழங்கி வைக்கப்பட்டது


Post a Comment