Header Ads



பாடசாலைகளுக்கு A/L பரீட்சை அட்டைகள் அனுப்பிவைப்பு


(ஏ.எல்.ஜுனைதீன்)

    இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சைக்கு     2 இலட்சத்து 92 ஆயிரத்து 706 மாணவர்கள் தோற்றுகின்றனர். சுமார் 2050 ற்கும் அதிகமான பரீட்சை நிலையங்கள் இதற்கெனத் தயார் படுத்தப்பட்டிருக்கின்றன. 14 ஆயிரத்திற்கும் கூடுதலான அதிகாரிகள் பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கின்றனர். எனத் தெரிவிக்கப்படுகின்றது.

     இப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான பரீட்சை அட்டைகள் தற்பொழுது தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என் ஜகத் புஸ்பகுமார அறிவித்துள்ளார்.

     கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர)ப் பரீட்சை ஆரம்பமாவதற்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதனால் இப் பரீட்சை அட்டைகளை இப்போதே அனுப்பி வைத்துள்ளதாகவும் இதனால் பாடசலை அதிபர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காது மாணவர்களுக்கு பரீட்சை அட்டைகளை உடனடியாக வழங்குமாறும் அவர் அதிபர்களைக் கேட்டுள்ளார்.

    மாணவர்களின் பரீட்சை அட்டையில் ஏதேனும் திருத்தங்கள் செய்யவேண்டியிருப்பின் உடனடியாக பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அட்டைகளை அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை அட்டைகளை அவர்களின் தனிப்பட்ட விலாசங்களுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி முடிவடையும்.  

No comments

Powered by Blogger.