வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
(நஷ்ஹத் அனா)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் உள்ள வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று (05.07.2013) இடம் பெற்றன.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாணவிகள் பாடசாலையில் இருந்து மஸ்ஜிதுல் பலாஹ் வீதி, வை.எம்.எம்.ஏ.வீதி, அந் நூர் வீதி வழியாக பாடசாலையை வந்தடைந்தனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவிகள் எமது பாடசாலையை நாமே பாதுகாப்போம், பாடசாலை சூழலை சுத்தமாக வைத்திருப்போம், குப்பைகளை உரிய இடத்தில் போடுவோம் போன்ற பதாதைகளை ஏந்திச் சென்றனர்.


Post a Comment