Header Ads



நேரம் பிந்திவந்த மின்சாரம் - நோன்பு திறப்பதில் சிக்கல்

(ஏ.எல்.ஜுனைதீன்)

   இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிராந்திய அலுவலகம் கல்முனைப் பிரதேசத்தில் சனிக் கிழமை காலை 8.00 மணியிலிருந்து 5.00 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மக்களுக்கு அறிவித்துவிட்டு மாலை 7 மணி 13 நிமிடங்களுக்குப் பிறகே மின்சாரத்தை மீண்டும் வழங்கியதால் முஸ்லிம் மக்கள் இப்தார் செய்யமுடியாமல் கஸ்டப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கவலை வெளியிட்டனர்.

    இப்தார் நோன்பு திறக்கும் நேரத்திற்குள் மின்சாரம் ஒரு மணித்தியாலமாவது பிந்தி  6.00 மணிக்கு கிடைத்துவிடும் என எதிர்பார்த்திருந்த நோன்பாளிகள் மின்சாரம் உரிய நேரத்திற்கு வழங்கப்படாததால் இருளிலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலும் கஸ்டப்பட்டு நோன்பு திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கஸ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்தனர்.

    காலை 8.00 மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் மாலை 7.மணி 13 நிமிடங்களுக்கு பின்னரே வழங்கப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.  

1 comment:

Powered by Blogger.