மஹியங்களை பள்ளிவாசல் சம்பவம் - முஸ்லிம்களை ஆழ்ந்த துயரில்
(எம்.எப்.எம். தாஹிர்)
புனித நோன்பு காலத்தில் இறைவழிபாட்டில் தம்மை அர்பணித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகியங்கனையில் உள்ள முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமான மஸ்ஜிதுல் அரபா ஜும்மா பள்ளிவாசல் மீது இனந்தெரியாத கும்பலொன்று நடாத்திய தாக்குதலும், அறுவருக்கத் தக்க வகையில் பன்றியின் உடற் பாகங்களையும், பள்ளிவாசலுக்குள் எரிந்து விட்டு சென்றுள்ளமையும் மிலேச்சதனத்தின் உச்ச கட்டத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளமை பதுளை மாவட்ட முஸ்லிம் அமைப்புக்கள் தமது கவலையையும் கண்டனத்தையும் முன்வைத்துள்ளன.
ஜம்மியத்துள் உலமாவின் பதுளை கிளை விடுத்துள்ள செய்தியில் ,
இனங்களுக்கிடையிலும், மதங்களுக்கிடையிலும் மோதல்களை தூண்டிவிடும். அநாகரீக செயற்பாடுகளை கண்டிப்பதாகவும், புனிதமிகு ரமழானில் மகியங்கனையில் இடம் பெற்றுள்ள கசப்பான சம்பவம் முஸ்லிம்களை ஆழ்ந்த துயரில் ஆழத்தியுள்ளது. இதனை மேற்கொண்டவர்கள் மீது சட்டம் தனது கடமையை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
இது விடயமாக பதுளை மாவட்ட முஸ்லிம் அமைப்புக்கள் தமது வன்மையான கண்டனங்களை முன்வைத்துள்ளன. பதுளை மாவட்ட தௌஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
ரமழான் காலமென்பது முஸ்லிம்களின் அல்குர்ஆன் இறக்கப்பட்ட புனித மாதமாகும். எதை செய்யக் கூடாது என வலியுறுத்துகிறதோ, அவைகளே இங்கு அரங்கேறியுள்ளது. முஸ்லிம்கள் இந்த மாதத்தில் தான் பள்ளிவாசல்களுடன் கூடுதலான தொடர்பை கொண்டிருப்பார்கள். இவ்வாறானதொரு கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்ட அறுவருப்பான மிகவும் விரும்பத்தகாத மிருகத்தின் உடற்பாகங்களை பள்ளிக்குள் வீசியுள்ளமையும், அதன் குருதியைக் கூட பள்ளியில் பூசிவிட்டு சென்றுள்ளமையானது முஸ்லிம் மக்களை மிகவும் வேதனை படுத்தும் சம்பவமாகும்.
இந்நாட்டின் ஒருமைபாட்டுக்காகவும், இன ஐக்கியத்துக்காகவும், அயராது பாடுபடும் ஜனாதிபதி அவர்களின் முயற்சியை மகியங்கனை போன்ற சம்பவங்களினால் ஒரு சில தீய சக்திகள் திசை திருப்ப முயற்சித்து வருகின்றமை வருந்தகூடிய விடயமாகும். இது தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் தகுந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவார் என முஸ்லிம்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இது போன்ற சம்பவங்கள் நாட்டில் இனிமேலும் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட தரப்பினர் உத்தரவாதம் படுத்தப்பட வேண்டும் என பதுளை மாவட்ட தௌவீத் ஜமாத் வலியுறுத்தியுள்ளது.
மேலும் பதுளை மாவட்ட முஸ்லிம் ஊடாக சம்மேளனம் தனது அறிக்கையில் தெரிவிப்பதாவது, கடந்த சில காலமாக முஸ்லிம்களை வெறுப்பூட்டும் வகையில் சில தீய சக்திகள் காடை தனத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்த வரிசையில் மகியங்கனை பகுதியில் நடந்த சம்பவமானது மனித நாகரீகத்துக்கு அப்பாற்பட்ட அநாகரிகச் செயலாகும். எந்தவொரு நாகரீக சமூகமும், இந்த வித நடவடிக்கையை அனுமதிக்காது. மக்களை நேர் வழிப்படுத்தவே சமயங்கள் வழிகாட்டுகின்றன.
அந்த வகையில் இங்கு இடம் பெற்றுள்ள இறை நிந்தனை நடவடிக்கையானது ஒரு சமயத்தையும், சமூகத்தையும் கொதித்தெழச் செய்துள்ளது. ஆகவே தேசிய ஒருமைபாட்டுக்கு அறைகூவல் விடுக்கும் ஜனாதிபதி அவர்களின் கடுமையான நடவடிக்கைகளினூடாக இது போன்ற நடவடிக்கைகள் இனியுந் தொடராமலிருக்க உத்தரவாதபடுத்த வேண்டும். தவிர ஜனாதிபதி அவர்களின் அபிவிருத்தி மற்றும் சமயங்களுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்தும் முயற்சிக்கு இத்தகைய செயற்பாடுகள் பாதகமாக அமையும். எனவே இவைக்கு பொறுப்பானவர்கள் இனங் காணப்பட்டு சட்டத்தின், முன் நிறுத்தப்படல் வேண்டும்.
அத்துடன் கடந்த வாரம் பதுளை ஜம்மியதுல் உலமா ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வை பகிஷ;கரிக்குமாறு கடும் போக்காளர்கள் சிலர் நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர். அதே போன்று அதே தினத்தில் இரத்தத் தானம் நிகழ்வு இடம் பெற்ற கட்டிடத்துக்கு முன்னால் கூடிய கடும் போக்காளர்கள் அங்கு வந்த அதிதிகளையும் இரத்த தானம் செய்ய வந்தவர்களையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமையும், கவலைக்குரியதாகும். இரத்த தானம் என்பது மனிதநேயமுள்ள ஒரு செயற்பாடாகும்.
எனவே, இவ்வாறான ஆன்மீக மற்றும் சமூக செயற்பாடுகளை சுதந்திரமாகவும், கௌரவமாகவும் நடாத்துவதற்குரிய சூழ்நிலைகள் உருவாக்கப்படல் வேண்டுமெனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச மரத்தை கண்டவுடன் பிடிங்கி எறியவும்.
ReplyDeleteDear All,
ReplyDeleteWe all will be asked in the day of judgement
“Oh Sri Lankan Muslim!!! My house was spoil with NAJEES, My house were destroyed, My Quran was burnt, I was shown as FIG in image etc….By that where were you people have been gone????
What is the answer we can say????
We cannot say that our leaders were taking action and we were kept quite as dummies.
We should take immediate re-action to show the at most objection, to make it expose to whole MUSLIM COUNTRY AND WORLD in the name of our beloved religion ISLAM,
Therefore, I humbly requesting you all to make unity and show our strength in next FRI DAY in Entire Island, please protect and condemn this racism and insist the GOVERNMENT to STOP these activities in future.
This will be considered as last stage of Emaan.
allah muslinkalin porumaiyai sothikkiran nichayamaha porumaialihaludan ALLAH IRUKKIRAN
ReplyDeleteI agree with Sarjoon
ReplyDelete