தனியார் பேரூந்து சங்கத்திற்கு மரண அச்சுறுத்தல் - போராட்டம் பிசுபிசுப்பு
தமது பணிப்புறக்கணிப்பை முற்பகல் மீளப்பெறுவதாக, இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
அமைப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை அடுத்தே இந்த பணிப்புறக்கணிப்பு மீள பெறப்படுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
வழமையாக வழங்கப்படும் வருடாந்த கட்டண மீளாய்வு இந்த வருடம் இடம்பெறாமையை ஆட்சேபித்து இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
Post a Comment