Header Ads



மேலதிக பேச்சுக்களை நடாத்த இந்தியா வரும்படி முஸ்லிம் காங்கிரஸுக்கு அழைப்பு

13வது திருத்தச்சட்டம் தொடர்பாகவும், அதிகாரப்பகிர்வு குறித்தும் பேச்சுக்களை நடத்த புதுடெல்லிக்கு வருமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. 

கொழும்பில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனுடன் நடத்தப்பட்ட சந்திப்பின்போதே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச்செயலர் ஹசன் அலி ஆகியோருடன் நடத்திய சந்திப்பின் போதே, மேலதிக பேச்சுக்களை நடத்த புதுடெல்லிக்கு வருமாறு சிவ்சங்கர் மேனன் அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த அழைப்பை தாம் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், விரைவில், புதுடெல்லி செல்லவுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரசின பொதுச்செயலர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.