கல்முனையில் சுகாதார பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
(யு.எம்.இஸ்ஹாக்)
இஸ்ஹாக் கல்முனைமாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் சுகாதார பாதிப்பை உண்டு பண்ணும் வகையில் செயற்பட்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் கல்முனை மாநகர சபையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டாரத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் சுகாதார பாதிப்பு தொடர்பான கலந்துரையாடல் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடை பெற்றது. கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.எல்.எம் .ரயிஸ் கணக்காளர் எல்;ரீ .சாலீதீன் உட்பட கல்முனை ,சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் போதே குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் தனிப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ள மாநகர சபையானது...கல்முனை நகர மண்டபத்தை அண்மைய நகர மண்டப வீதி வடிகானை புனர் நிர்மாணம் (1962ல் நிர்மாணிக்கப்பட்டது ) செய்யாமால் நுளம்பு விளையும் உறைவிடமாக கைவிடபட்டுள்ளைமைக்கு யாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் .....மாநகர சபைக்கு எதிராகவா அல்லது சுகாதார திணைக்களத்திற்கு எதிராகவா? மேயரே உங்கள் அலுவலகத்திக்கு செல்லும் வேளையில் வாகனத்தை நகர மண்டபம் அருகே நிறுத்தி பிரதான வீதியிலிருந்து மேற்க்கு கிழக்கு நோக்கி 50மீட்டர் நடந்து பாருங்கள் வடிகானின் அவல நிலையை அவதானிக்கலாம். எம்.பி யின் திது லன 50அபிவிருத்தி திட்டத்திலும் இந்த வடிகான் கண்ணில் படாததும் விந்தையே....மேயரே தாங்கள் ஏனும் நடவைக்கை எடுத்து புனர் நிர்மாணம் செய்வீர்கள் என மக்கள் எதிர்பார்கின்றனர்.
ReplyDelete