ஐ.தே.க. யிடம் சத்தியம் செய்து, சில மணிநேரத்தில் கட்சியை விட்டுச்சென்ற தயாசிறி
ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஓர் துரோகி என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. தயாசிறி ஜயசேகர நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியில் இணைந்து கொண்டார்.
இதேவேளை, தயாசிறி ஜயசேகர அரசாங்கத்தின் கைப்பொம்மையாக செயற்பட்டு வருவதாக திஸ்ஸஅத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார். கட்சிக்கு இழைத்த துரோகத்திற்கு தயாசிறிக்கு இயற்கையாகவும், அரசியல் ரீதியாகவும் தண்டனை கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வரப்பிரசாதங்கள் மற்றும் பணத்திற்காக வாக்காளர்களையும், கட்சியையும் தயாசிறி ஏமாற்றி விட்டதாக திஸ்ஸஅத்தநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, தயாசிறி ஜயசேகரவை விடவும் சிறந்த நடிகர்கள் இந்த நாட்டில் இருக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். அவர் அனைவரையும் முட்டாளாக்கி தனது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். தயாசிறி திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை என்ற போதிலும், நேர்மைத்தன்மையே திறமைக்கு வலு சேர்க்கும் என்பதனை அவர் புரிந்துகொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
தயாசிறி எடுத்த தீர்மானம் அருவருக்கதக்கது - அஜித் பெரேரா
ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து விலக போவதில்லை என சத்தியம் செய்து, சில மணிநேரம் செல்வதற்குள், கட்சியை விட்டுச் செல்ல தயாசிறி ஜயசேகர எடுத்த தீர்மானம் அருவருக்கதக்கது எனவும் சிறப்புரிமைகளுக்காக கட்சியினரையும், வாக்காளர்களையும் அவர் காட்டிக் கொடுத்த துரோகி எனவும் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தயாசிறி ஜயசேகரவின் இந்த தீர்மானம் தற்கொலைக்கு ஈடானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தயாசிறி சிறிது காலம் பொறுத்திருந்திருக்கலாம் - சஜித்
ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அவசரப்பட்டு விட்டதாகவும் அவர் மேலும் சிறிது காலம் பொறுத்திருந்திருக்கலாம் எனவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசியல் பொறுமையாக இருந்துதான் தமது அரசியல் பயணங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பொறுமையுடன் இருந்து அனைத்தையும் அனுபவித்து செல்லும் அரசியல் பயணமே வெற்றிப்பெறும். ஐக்கிய தேசியக்கட்சியில் தயாசிறி ஜயசேகரவுக்கு சிறந்ததொரு எதிர்காலம் காத்திருந்தது எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார். gtn

அரசியல்வாதிகளை நம்பலாமா?
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!
ReplyDeleteகிட்டத்தட்ட முதலாவது கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஸ்ரீ.ல.மு.காங்கிரஸிலிருந்து ஆளுந்தரப்புக்கு ஹிஸ்புல்லா போனது போல..
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
For Hizbulla Bro the Muslim congrss was gave address to him but he totally have forgotten everything and the duty for his community.
ReplyDelete