அட்டாளைச்சேனை வீதி புனரமைப்பில் மோசடிகள்
அட்டாளைச்சேனை புறத்தோட்டம் - வாய்க்கால் வீதி புனரமைப்பு நடவடிக்கையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து – அப்பகுதி மக்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளரிடம் செவ்வாய்கிழமையன்று கடிதமொன்றினைக் கையளித்துள்ளனர். இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஆகியோருக்கும் குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 03 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், சமூக அமைப்பு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீதிப் புனரமைப்பு நடவடிக்கையானது - உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என இப் பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
'வீதி புனரமைப்பு எனும் பெயரில் இடம்பெறும் மோசடியைக் கண்டித்தல்' எனும் தலைப்பில் அப்பகுதி பொதுமக்களால் கையொப்பமிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மேற்படி கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுள,
அட்டாளைச்சேனை 09 ஆம் பிரிவு புறத்தோட்டம் வாய்க்கால் வீதி அல்லது ஊர்க்கரை வீதியில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் கிறவல் தூவும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
வீதிப் புனரமைப்பு எனும் பெயரில் - ஏற்கனவே இருந்த வீதியையும் இவ்வாறு கிறவலைத் தூவி நாசம் செய்யப்பட்டுள்ளீர்கள்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 03 லட்சம் ரூபா நிதியின் கீழ் சமூக அமைப்பு ஒன்றே - மேற்படி வீதிக்கு கிறவல் தூவும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது.
இந்த வீதியைப் புனரமைப்பதாயின், வீதிப்புனரமைப்பு நியமங்களின் அடிப்படையில் அதை மேற்கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் இப்படியான கிறவல் தூவும் நடவடிக்கையினை மேற்கொண்டதன் மூலம் - ஏற்கனவே இருந்த வீதியினையும் நாசம் செய்துள்ளீர்கள்.
உண்மையில், இது - வீதி புனரமைப்பாகத் தெரியவில்லை. இந்த வீதியை வைத்து பணம் உழைக்கும் முயற்சி இடம்பெற்றுள்ளது எனும் சந்தேகமே எமக்கு ஏற்பட்டுள்ளது.
மக்களாகிய எங்களின் வரிப் பணத்தை, இவ்வாறு ஒன்றுக்கும் உதவாத வகையில் வீதி புனரமைப்பு எனும் பெயரில் வீண் விரயம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
மேற்படி புறத்தோட்டம் வாய்க்கால் வீதியின் 600 மீற்றருக்கும் குறைவான பகுதியில் உழவு இயந்திரத்தின் 10 க்கும் குறைந்த பெட்டி அளவான கிறவல் மண்தான் கொட்டித் தூவப்பட்டுள்ளது.
எனவே, வீதிப் புனரமைப்பு நியமங்களின் அடிப்படையில், இந்த வீதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 03 லட்சம் ரூபாவினையும் செலவிட்டு - இந்த வீதிக்கு கிறவல் நிரப்புவதோடு, உரிய இயந்திரங்கள் மூலம் அதைச் செம்மைப்படுத்தித் தரவேண்டுமென - இப் பகுதி மக்களாகிய நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இக்கோரிக்கை தொடர்பில் தாங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாமல் விடுவீர்களாயின், ஜனநாயக முறையில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியேற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாஸா அல்லாஹ்! மிகவும் நல்ல செயல்பாடு இதுபோலவே எல்லா இடங்களிலும் தப்புகளைக்காணும்போது மக்கள் விழிப்பாக இருந்து செயல்பட்டால் குழறுபடி செய்யும் குள்ள நரிகளை அடியோடு இல்லாமல் ஆக்கிவிடலாம் இதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கவேண்டும். வாழ்த்துக்கள். அட்டாளைச்சேனை மக்களின் செயலை எண்ணி பெருமிதம் அடைகின்றோம்.
ReplyDeleteகுறிப்பிட்ட படத்தில் மிக அவதானமாக ஊற்று நோக்கினால் இதற்கான சரியான விடை வரும்.
ReplyDeleteகுறிப்பிட்ட பத்தில் எல்லா இடங்களிலும் கிரவல் மணல் போடப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மட்டும் சிறிதளவு வெள்ளை நிறமுடைய மணல் தெரிவதாகயிருந்தால் இங்கு ஏதோ ஒரு சதி முயற்றி நடந்துள்ளது.
எனவே இப்பாதை புணரமைப்பு வேலைகள் சரியா மேற்கொள்ளப்பட்டு வருகின்றுது. இன்னும் பாதை வேலைகள் முற்றுப்பெறாத நிலையில் இதில் எவ்வாறு மோசடி இடம்பெற்றுள்ளது. என்று சொல்லமுடியும்.
இதில் ஒன்று மட்டும் விளங்குகின்றதுஇ ஒரு தனிநபரின் சுய இலாபத்திற்காக பொதுமக்களை பிழையான வழிக்கு இட்டுச்செல்வது மிக தெட்டத்தெளிவாக புரிகின்றது.
எனவே இவ்வாறான செயலில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் அச்செயலினை மாற்றியமைத்து நடக்கவேண்டும்.
இல்லாயென்றால் ...........................???