தயாசிறிக்காக பந்தயம் கட்டியவர் உள்ளாடையுடன் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலக மாட்டார் என்று பந்தயம் கட்டி தோல்வி அடைந்தமையால், உள்ளாடையுடன் பயணிக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெரனியகல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெரனியகலை - இலுக்தென்ன பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான அவர், தயாசிறி ஜெயசேகர ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து விலகமாடார் என்று பந்தயம் கட்டி இருந்தார்.
எனினும் தயாசிறி கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துக் கொண்ட நிலையில், பந்தயத்தில் தோல்வியுற்றமைக்காக உள்ளாடையுடன் அவர் நகருக்குள் ஓட முற்பட்டுள்ளார். எனினும் அவரை காவற்துறையினர் கைது செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment