Header Ads



ஆசிரியையை மண்டியிட வைத்த அரசியல்வாதிக்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

நவகத்தேகம நவோத்தியா பாடசாலையில் ஆசிரியை ஒருவரை முழந்தாழிட செய்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் தெரிவுக்குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக அந்த குழுவின் உறுப்பினரான சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌவுசி தெரிவித்துள்ளார்.

ஆசிரியையை முழந்தாழிட வைத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமார அண்மையில் வேட்பாளர் தெரிவுக்குழுவிடம் அதற்கான நேர்முகப் பரீட்சைக்காக முன்னிலையாகியிருந்தார்.

அதன்போது, குறித்த அரசியல்வாதி எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை பெற்றவர் என்று வேட்பாளர் தெரிவுக்குழு தீர்மானித்துள்ளது.

வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவினால் நவகத்தேகம மகா வித்தியாலயத்தின் ஆசிரியையான ஸ்ரீயானி சுசிலா ஹேரத் கடந்த மாதம் 14 ஆம் திகதி முழந்தாழிட வைக்கப்பட்டார்.

பின்னர் குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், வடமேல் மாகாண சபையில் போட்டியிடுவதற்கு குறித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினருக்கு வேட்புரிமை வழங்கப்பட்டால் தாம் தேர்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருக்க போவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், அவருக்கு வேட்புரிமை வழங்கப்பட்டமை தொடர்பில் கல்வியமைச்சர் தமது நிலைப்பாட்டை நாட்டிற்கு வெளியிடவேண்டும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பான அறிக்கையொன்றில் தமது வலியுறுத்ததை விடுத்துள்ளதாக சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். Sfm

2 comments:

  1. ஸ்டாலினுக்கு வெள்ளை வேன்!

    ReplyDelete
  2. Ilaction itku vetpaalar therivu seyvathu ippadi irukkumoo? Ur per vivaramgal keettapinbu
    Kelvi; ADITHADI SHANDEY SEYTHATHUNDA?
    Pathil; illey yenraal fail . Aam enraal pass.
    kelvi; police case kal irukka
    Pathi: illey enraal fail. Aam enraal pass
    Thodarnthu.
    Pengal shiruvar thuspirayooham katpalippu?
    Lanjam uulal?
    Koley?
    Kolley?
    Mooshadi?
    Thiruttu?
    Kutra seyalhal?
    Ippadi pattiyal ittu
    pathil AAM ATHIHAM SOLVAVAR ENRAAL THAHUTHI PERUAAROO?
    ILLEY ENRU ATHIHAM SOLVAVAR ARASHIYALUKKU LAAYIKKU ILLEY ENBAARHALOO?
    ITHU THAAAN ARASHIYAL SHAHAJAMAANA NILEY.

    ReplyDelete

Powered by Blogger.