எகிப்தின் இடைக்கால ஜனாதிபதிக்கு ஜோர்டான் மன்னர் பாராட்டு
எகிப்தில் இஸ்லாமிய அரசு வீழ்ந்த பின் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு தலைவராக ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் பதிவானார். நேற்று முன்தினம் எகிப்துக்கு விஜயம் மேற்கொண்ட அவர் இடைக்கால ஜனாதிபதியை சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டார்.
அவர் எகிப்து மக்களின் தேர்வு என்றும் ஜோர்தான் மன்னர் புகழ்ந்தார். உள்நாட்டிலும் இஸ்லாமியவாதிகளின் அழுத்தத்திற்கு முகம்கொடுத்து வரும் ஜோர்தான் மன்னர் எகிப்தில் இராணுவ புரட்சி ஏற்பட்ட போது முதல் ஆளாக தனது வாழ்த்தை தெரிவித்தார். மன்னர் அப்துல்லாஹ்வை கெய்ரோ விமான நிலையத்தில் காபந்து அரசின் பிரதமர் பப்லாவி, வரவேற்றார்.

மக்கள் அபிமானம் பெற்ற இந்த ஊடகதில் இஸ்லாமிய அடிபடைகளை தகர்க்கும் வகையிலான செய்திகள் இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாகும் .
ReplyDelete(எகிப்தில் இஸ்லாமிய ஆட்சி அரசு வீழ்ந்துள்ளது )என்ற அடிப்படையில் செய்திகள் வெளியிடுவது இஸ்லாத்தை அவமதிக்கும் ஒரு செயலே .
உலக வரலாற்றில் இஸ்லாமிய அரசு ஒரு போதும் வீழ்த்தப்படவுமில்லை வீழ்தப்படபோவதும் இல்லை ,மாறாக இஸ்லாமிய கொள்கைகளை விட்டு தூரமான சந்தற்பதிலேதான் இஸ்லாமிய பெயர் தாங்கி அரசுகள் வீழ்த்தப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
எகிப்தின் ஆட்சியை இஸ்லாமிய ஆட்சி என்று ஆட்சியில் இருந்த இக்வானிய இயக்கமே இதுவரை சொன்னதில்லை, மாறாக இஸ்லாத்திற்கு முற்று முழுதாக எதிரான ஆட்சி முறையான (democratic) ஜனநாயக ஆட்சி என்றே சொல்கிறது அது மட்டு மில்லாமல் மார்க்கத்தின் அடிபடையிலான ஒரு ஆட்சியை ஒரு போதும் ஆதரிக்க போவதும் இல்லை என்று இக்வானிய ஆட்சின் முதலாவது ஜனாதிபதியான முகமத் முர்சி கூறிய வார்த்தைகளை இந்த இடத்தில் பதிவு செய்வது பொருத்தம் என நினைக்கிறன் .
இஸ்லாம் என்பது ஒரு தனிப்பட்ட கட்சிக்கோ இயக்கத்திற்கோ சொந்தமான மார்க்கம் இல்லை அக்கட்சிகள் தோல்வியடையும் போது இஸ்லாம் தோல்வியடைந்தது என்று கருத்துகூற .
இந்த விடயத்தில் ஜப்னாமுஸ்லிம் இணையத்தளம் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .
முகமத் முர்சியின் வாக்குமூலம் கீழே தரப்படுகிறது .http://www.tahtawy.com/index.php/index.php?option=com_content&view=article&id=2418:2012-09-07-09-31-44&catid=55:2012-02-20-08-30-44&Itemid=27