Header Ads



காத்தான்குடி 'ஏ வன் கொட்டேஜ் பீச் ரெஸோட்' உணவகம திறப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை முன்பாக டாக்டர் அப்துர் றஹ்மான் தோட்டம் கடற்ரை வீதி புதிய காத்தான்குடி எனும் முகவரியில்      கடற்கரைக்கு அருகாமையில் இயற்கை எழில்கொஞ்சும் ரம்மியமான சூழலில் நமது பிரதேசத்தின் நீண்டகால தேவையாக குடும்ப சகிதம் உணவு உண்டு மகிழ்வதற்கான வசதிகளுடன் இஸ்லாமிய சூழ்நிலைக்கு அமைவாக அமைக்கப்பட்ட ஏ வன் கொட்டேஜ் பீச் ரெஸோட் உணவக திறப்பு விழா 21-07-2013 ஞாயிற்றுக்கிழமை இரவு ஏ வன் கொட்டேஜ் பீச் ரெஸோட் உணவகத்தின் பணிப்பாளரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உற்பத்தி திறன் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யு.எல்.எம்.என்.மூபீன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் உற்பத்தி திறன் திறன் அபிவிருத்தி அமைச்சரும்,ஸ்ரீலங்கா முஸ்லிம்' காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பஷீர் சேகுதாவூத் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் உணவகத்தின் நடாவை வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் ஆயுட்காலத் தலைவர் ஐ.எல்.எம்.முஸ்தபா (பஹ்ஜி), முன்னாள் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவரும்,தற்போதய முஹைத்தீன் மெத்தைப் பெரிய ஜூம்மா பள்ளிவாயல் தலைவருமான மர்சூக் அஹமட் லெப்பை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான இஸ்மாயில்,டில்சான்,காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அலி சப்ரி மற்றும் உலமாக்கள் ஊர் பிரமுகர்கள் புத்திஜீவிகள் என பலரும் பிரச்சமாயிருந்தனர்.

இங்கு சீன,இந்திய ,அறேபிய ,மலேசிய,இலங்கை உணவுகள் இப்தார் நோன்ப திறப்பதற்கான சிற்றுண்டிகள்,சகர் விஷேட உணவுகள் (சகன்),திருமண ,விலீமா,மற்றும் விஷேட வைபவங்களுக்கான அணைத்து வகை உணவுகளையும் இங்கு பெற்றுகொள்ள முடியம் என ஏ வன் கொட்டேஜ் பீச் ரெஸோட் உணவகத்தின் பணிப்பாளர் யூ.எல்.எம்.என் முபீன் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.