கேகாலை நீதிமன்றத்தினால் மூவருக்கு மரண தண்டனை விதிப்பு
(Tm) கொலைக் குற்றச்சாட்டப்பட்ட மூவரை குற்றவாளிகள் என இனங்கண்ட கேகாலை நீதவான் இன்று திங்கட்கிழமை மரண தண்டனை விதித்துள்ளார்.
அங்குருவெல்ல பிரதேசத்தில் 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை நிரூபிக்கப்பட்டமையினை அடுத்தே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களின் நண்பர் ஆகியோருக்கே இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் ஏற்கனவே 500,000 ரூபா திருட்டு சம்பவமொன்று தொடர்பில் 10,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டு 20 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையிலே மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment