மஹியங்கனையில் பொதுபல சேனா ஊர்வலத்திற்கு ஏற்பாடு..!
தெஹியதகண்டி முதல் மஹியங்களை வரை ஊர்வலமொன்றுக்கும், பொதுக் கூட்டமொன்றுக்கும் பொதுபல சேனா அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 11 ஆம் திகதி மஹியங்கனை பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அந்த பள்ளிவாசலில் பன்றியின் இரத்தம் ஓட்டப்பட்டமை, பள்ளிவாசலில் தொழுகை நடாத்தக்கூடாது என விடுக்கப்பட்ட எச்சரிக்கை, அதனையடுத்து வெள்ளக்கழமை ஜும்மா தொழுகையினை நடாத்துவதில் ஏற்பட்ட தயக்கம் போன்ற நிலவரங்களுக்கிடையே பொதுபல சேனாவின் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மஹியங்கனை பள்ளிவாசல் ஸ்தாபகத் தலைவரும்இ முக்கியஸ்தருமான எஸ்.எம். சீனிமுஹம்மத் ஹாஜியார் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு வழங்கிய தகவல்கள் வருமாறு,
மஹியங்கனையின் வர்த்தகம் செய்யும் முஸ்லிம் வியாபாரிகளுக்க எதிராக பொதுபல சேனா பிரச்சாரம் செய்துவருகிறது. அவர்கள் ஊர்வலம் நடாத்த திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ஏற்கனவே பள்ளிவாசலும் தாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் நாங்கள் நீதிமைச்சர் ரவூப் ஹக்கீமோடு பேச்சுவார்த்தை நடாத்தினோம். அவரிடம் பிரதேச நிலைமைகள் குறித்து முறையிட்டோம். அமைச்சர் ஹக்கீமும் இதுகுறித்து உரிய பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டார். எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன். அவனே பாதுகாப்பு வழங்குபவன் எனவும் சீனிமுஹம்மத் ஹாஜியார் மேலும் தெரிவித்தார்.

allah only enough for us
ReplyDelete