Header Ads



நிந்தவூரிற்கு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம்..?

(சுலைமான் றாபி) 

நிந்தவூரின் தேவையாக இருக்கும் திண்மக்கழிவு முகாமைத்துவம் சம்பந்தமாக பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம்.  தாஹிர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் ஆகியோர் (17.07.2013) நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வில் சமரசமாக பேசியதாக அறியவருகிறது.

மேலும் இந்த விடயத்தில் குறிப்பிட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் அமைப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரதேச சபைத்தவிசாளருடன் உரையாட,  தவிசாளர் அவர்கள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அனுசரணையின் கீழ் செயற்படுத்தப்படும் "பிலிசரு" திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்கான திட்ட வரைபுகள் சுமார் 03 வருடங்களாக சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரைக்கும் எவ்வித முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் இடம்பெறாமல் இது புறந்தள்ளப்பட்டிருப்பதாக கவலை தெரிவித்து குறிப்பாக இந்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினை அமைக்க நிந்தவூர் பரவட்டைப்பிட்டியில் போதியளவான இடம் காணப்படுவதாகவும் மாகாண சபை உறுப்பினரின் கவனதிற்கு கொண்டு வந்தார். இதற்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இந்த தேவையினை உடனடியாக நிறைவேற்றித்தருவதாக நிந்தவூர் பிரதேச சபைத்தவிசாளர் எம்.ஏ.எம்.  தாஹிர் அவர்களுடன் உறுதியளித்தார். 

No comments

Powered by Blogger.