நிந்தவூர் வைத்தியசாலை கவனிக்குமா..?
(சுலைமான் றாபி)
நோயாளர்களின் தேவைகளை நிறைவு செய்து அவர்களை ஆரோக்கியமானவர்களாக மாற்றுவதே ஒவ்வொரு வைத்தியர்களினதும், வைத்தியசாலைகளினதும் தார்மீகக் கடமைகளாகும். ஆனால் இந்த நிலை மாறி வைத்தியர்களையும் , வைத்தியசாலையையும் ஆரோக்கியமானவர்களாக மாற்றுவதுதான் இன்றைய நிலையாக மாறிவருகின்றது.
இதனை உண்மைப்படுத்தும் ஒரு சம்பவமாக (21.07.2013) நிந்தவூர் வைத்தியசாலை வீதியில் இடம்பெற்ற ஒரு விபத்து இதற்கு சான்று பகிர்கின்றது. இந்த விபத்தில் நிந்தவூர் 15ஐ சேர்ந்த M றிஸ்லின் என்பவர் பலத்த காயங்களுடன் தனது உயிருக்கு போராடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அந்த நேரம் ஒருவைத்தியரும் இல்லாமல் இருந்ததனை அறிய முடிந்தது. இதனால் ஆத்திரமுற்ற அவரின் உறவினர்களும், பொது மக்களும் குழுமி இருந்து இவ்வைத்தியசாலையில் அமைதியின்மை நிலையினை தோற்றுவித்தனர்.
இது சம்பந்தமாக நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி Dr MCM மாஹிர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,
குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக விபத்தில் காயமடைந்தவர் பி.ப. 2.12 மணியளவிலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் எனவும் ஞாயிற்றுக்கிழமை என்றபடியால் கடமை மாற்றம் (Shift Duty) பி.ப. 2.00 மணிக்கு ஆரம்பிக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். அப்படிஎன்றால் பி.ப. 2.00 மணிக்கு வைத்தியர்கள் சமூகம் தரவில்லையா? என்று கேட்ட போது.. அது வைத்தியர்கள் கடமைக்கு சமூகம் தரும் நேரத்தில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆனால் கடமை மாற்றம் செய்கின்ற போது கடமையை பரிமாற்றம் செய்யும் வைத்தியர் அவ்விடத்தில் இல்லாமல் விட்டாரா என்பது கேள்விக்குறியாகியது.
இதேவேளை, இந்த விபத்தினை நேரில் பார்த்த ஒருவர் காயமடைந்தவரை பி.ப. 1.45 - 1.50 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தான் வைத்தியசாலையில் அனுமதித்ததாக தெரிவித்தார். எது எவ்வாறாயினும் இரண்டு கடமை மாற்ற நேரங்களில் இவ்விடத்தில் எந்த வைத்தியர்களும் இல்லாமல் விட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது!! இதேவேளை விபத்தில் காயமடைந்தவருக்கு பி.ப. 2.40 மணியளவிலே சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக தெரியவருகிறது.
குறிப்பிட்ட நேரம் கடமையிலிருந்த வைத்தியரை வைத்தியசாலை தாதிமார்கள் அவசர தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்த பின்னரே அவர் வைத்தியசாலைக்கு சமூகம்தந்தார். மேலும் இந்த சம்பவம் சம்பந்தமாக வைத்தியசாலை அதிகாரியொருவர் வைத்திய அதிகாரி Dr MCM மாஹிர் அவர்களுக்கு அவசர அறிவித்தல் வழங்கியதையடுத்து நிலைமை இன்னும் சூடு பிடித்ததனை நன்றாக அவதானிக்க முடிந்தது. இதேவேளை இந்த விபத்தில் காயமடைந்தவரை மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு "காரைதீவு வைத்தியசாலைக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டி" மூலமாகவே கொண்டு சென்றனர். இப்படியான சம்பவங்கள் நிந்தவூர் வைத்தியசாலையில் அடிக்கடி நிகழ்வது வழமையாகும்.
நோயாளிகளின் உயிர்கள் விடயத்திலும், திறமையான சிகிச்சை விடயத்திலும் பொறுப்புடன் செயற்படுவது வைத்தியர்களினதும் வைத்தியசாலைகளினதும் கடமையல்லவா??


வைத்தியசாலையை அழகாக வைத்திருந்தால் மட்டும் போதுமா உள்ளக வசதிகள் சரியாக இருக்க வேண்டும் முதலில் அங்குள்ள வைத்தியர்களுக்கு மாறுதல் கொடுத்து புதிய வைத்தியர்களை கொண்டு சீரான சிகிச்சை வழங்க மாவட்ட அதிகாரி முயலவேண்டும் அதுமாத்திரமல்ல சில வைத்டதியர்கள் நடந்துகொள்ளும் முறை ஆத்திரமூட்டுவதாக இருக்கும் அவர்கள் அல்லாஹ்வை பயப்படவேண்டும் இது அமானிதம் சம்பந்தப்பட்ட சகலரும் அல்லாஹ்வைப்பயந்து நடந்து கொள்ளுங்கள் டொக்டர் மாஹிருடைய நிருவாக சீரின்மையே இதற்கு காரணமாக இருக்கலாம் தயவு மனிதர்களுடை உயிருடன் விளையாடும் இந்தமாதிரியான் விடயங்களுக்கு முற்றூப்புள்ளி வைக்கவும்.
ReplyDeleteThis hospital was awarded last year for productivity award. Wasn't it? If the situation is like this, what the value of such award to this hospital?
ReplyDeleteஇந்த நேரத்தில் வைத்தியர் கடமையில் இருந்த முறை ஒன் கோள் கடமையே ஆகும். இதில் தாதியினர் அவசர அழைப்பு வழங்கும் போதுதான் வைத்தியர் சமுகம் தர வேண்டும்.இதுதான் முறையாகும்.இருப்பினும் இதன்போது தாதியினர் அவசரம் காரணமாக உரிய வைத்தியரின் தொலைபேசி இலக்கத்தை தவறுதலாக மாற்றி அழைத்தமை உரிய வைத்தியருக்கு தகவல் கிடைக்காமைக்கும் பின்னர் திருத்தி அழைத்தே தகவல் சொல்லப்பட்டமையுமே இக்குழப்பத்திற்குக் காரணமாகும்.
ReplyDeleteஒன்கால் என்பது வைத்தியசாலையில் எந்நேரமும் வைத்தியர் இருப்பதா அல்லது வீட்டில் இருக்கும் வைத்தியரை கால் எடுத்து வர சொல்லுவதா???? நேசுக்கு வைத்தியர் நம்பர் தெரியாமல் இருக்குமா ????
ReplyDeleteஒன் கோள் என்ற சொல்லிலேயே உள்ளது. எது போன்ரூ நிஹழ்ந்தால் அவசர அழைப்புக்கு வைத்தியர் குறித்த நான் நினைக்கிறன் 20 நிமிடங்கள் என்று , அதற்குள் வர வேண்டும். மனிதன் என்பெவனுக்கு தவறு அவசர நேரத்தில் வரும். இதன் பொது நடந்த தவறை உறுதிப் படுத்த இலங்கை தொலை தொடர்பு காரியாலயத்தை நாடினால் உண்மை புரியும்
ReplyDeleteUnmaiil thavaru onru nadanthu ullathu antha narathil on call doctoraha irrunthavar mihavum porupudan thanathu velaii seifevar anray palarallim pesappadufavar.Ithai arivippu saithavarin vappa urrallam tholil tharuvathaha solli panam vankiirrupathai yar arrivippu seivathu.?
ReplyDeleteThe Incident happend at 1.45 pm..... But the doctor arrived at the hospital at 2.50 pm........ and transverd to AMH at 3.00 pm......
ReplyDeleteWhat the helll is going on at this hospital......
The Correct Actions should be taken up to those who corrupted the patient and their relatives.
The dr shuld be on admission at any time please refer Sri lanka medical council constitution duty and responsibilty oncall is consultant duty it is not a medical officer duty
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletenintavur vaithiyasaalaiyin munnaya thavaru onrinaal enathu ummammahvin uyirai parikoduthen.meendum ivvidayam nadanthera kaaranam vaithiyarhal pilai mattumanri ooliyarhali sila thavaruhalum ulladanguhinrathu..
ReplyDeleteஎல்லாருக்கும் வணக்கம். முதலில்ல இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது உண்மைதான். நீக்க எல்லாரும் என்ன நோக்கத்துக்காக கமெண்ட் பண்ணிறிங்க.இந்த வைத்தியசாலை என்ன வைத்தியசாலை மாவட்ட வைத்தியசாலை.இத் துறை தவிந்தவர்களுக்கு என்ன வைத்தியசாலையில் என்ன நடைமுறை என்று தெரியுமா ?.எல்லா வைத்தியசாலையிலும் நடைமுறை மாறுபடும்.தெளிவாக ஒருவிடையம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவினுள் (ETU ) சென்று படம் பிடிக்கிற நிலைமையில் தான் இவ் வைத்தியசாலை இருக்கிறது. அஸ்ரப் வைத்தியசாலையில் ETU னுள் சென்றுபார்க்க முடிமா?. பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று தெரியாதா?.முதலில் மற்றவர்களை குறை கூறுவதை விட்டு இப்படியான பிரச்சினை இனிமேல் வராமல் எப்படி சரிசெய்வது என்று ஆராயுங்கள். நிர்வாகம் பற்றி பெசுவதக்கு முன் தனக்கு என்ன தெரியும் நிருவாகத்தை பற்றி என்று பாருங்க.தெரியாத விடயம் பற்றி கதைக்ககூடாது. நீக்கள் நிருவாகம் செய்திருந்தால் மட்டும் தான் அதை பற்றி கதைக்கலாம்.வைத்தியர்கள் தொடர்ந்து இருப்பதற்கு நடவடிக்க எடுங்க. அதைவிட்டு நிருவாகம் பற்றியும் வைத்தியசலையையும் பற்றி கதைக்காமல். வைத்தியர்கள் கடமை நெரத்தில் வைத்தியசாலையில் இல்லாமல் இருப்பது வைத்தியசாலைக்கு பிரச்சினையை கொண்டுவரும். இதை சரி சரிசெய்யுங்கள் அதை விட்டு Cal எடுத்தது Number பிழை என்று விளையாடாமல்.............................
ReplyDeleteவணக்கம் ஓன் கோள் என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க வீட்ட இருக்கிற வைத்தியரை Cal பண்ணி கூபிடுரதா யேய் 20 நிமிடத்துக்குள் வருவது என்றால் வந்த patient செத்து போய்விடும் உங்கள் சகோதரனை கொண்டுவந்து 20 நிமிடம் சாகிறதுக்கு பொடுவெல என்ன கதைக்கிறிங்க தெரியாதவிடயம் பற்றி கதைக்க கூடாது. வைத்தியசாலை சென்று உண்மை தகவலை எடுத்து பிறகு கதையுங்க
ReplyDelete