Header Ads



வட­மா­காண தேர்­தலில் வெற்­றி­ பெற்­றால்தான் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை குறித்து தீர்­மா­னிக்கலாம்

சர்­வ­தே­சத்தின் நிலைப்­பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்­துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.

நாம் அனை­வரும் இணைந்து இதற்­காக பாடு­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் கோரி­யுள்ளார்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டம்வவு­னியா நக­ரி­லுள்ள வசந்தம் ஹோட்­டலில் இடம்­பெற்­றது. இக்­கூட்­டத்­துக்கு தலைமை வகித்து உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்தன் எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 இங்கு அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,
  
வட­மா­காண சபைத் தேர்­தலில் வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யான வெற்­றி­யினை நாம் பெற­வேண்டும் வட­மா­காண சபையில் உள்ள 36 உறுப்­பி­னர்­களில் 30 உறுப்­பி­னர்­க­ளை­யா­வது நாம் பெற வேண்டும். சர்­வ­தேச ரீதியில் பெரும் எதிர்­பார்ப்பை இந்த தேர்தல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்தத் தேர்­தலில் நாம் வர­லாற்றுத் திருப்­பு­மு­னை­யான வெற்­றி­யினை பெற்­றால்தான் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து தீர்­மா­னிக்க முடியும்.

No comments

Powered by Blogger.