Header Ads



ஜமாதே இஸ்லாமியின் வழிகாட்டலில் பாத்திமா ஸஹ்ரா மகளிர் அரபுக் கல்லூரிக்கு புதிய கட்டடம்

(நஷ்ஹத் அனா)

ஓட்டமாவடி பாத்திமா ஸஹ்ரா மகளிர் அரபுக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட இரு மாடிக் கட்டடத் திறப்பு விழா இடம் பெற்றது.

இரு மாடிக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வு கல்லூரி நிருவாக சபைத் தலைவர் எம்.மஹ்மூத் தலைமையில் இடம் பெற்ற போது துருக்கி நாட்டைச் சேர்ந்த அமைப்பினது பிரதி நிதிகளான ஸப்ரி மீரியா முஹம்மட் துருக்மன்  கிழக்குப் பல்கலைக் கழக விரிவுரையாளர் எம்.ரீ.எம்.றிஸ்வி மற்றும் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த அமைப்பினதும் இலங்கை ஜமாதே இஸ்லாமியினதும் ஒன்பது மில்லியன் ரூபா நிதியளிப்பிலும் இலங்கை ஜமாதே இஸ்லாமியின் வழிகாட்டலில் அமையப் பெற்ற இரு மாடிக் கட்டிடத்தில் நிருவாக காரியாலயம், இரண்டு வகுப்பரைகள் கூட்ட மண்டபம், மாணவர் விடுதி என்பன அமையப் பெற்றுள்ளதாக கல்லூரியின் நிருவாக சபைத் தலைவர் எம்.மஹ்மூத் தெரிவித்தார்.




No comments

Powered by Blogger.