ஆசிரியர்களை பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை
(எம்.எம்.ஏ.ஸமட்)
ஆசிரியர்களைப் பல்கலைக்கழகங்களில் இணைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய,2012ஃ2013 ஆம் கல்வியாண்டில் ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்ட கலைப்பட்ட பாடநெறி மற்றும் விஞ்ஞானப் பாடநெறி ஆகிய பாடநெற்களைத் தொடர்வதற்கு தகைமையுடைய ஆசிரியர்களிடமிருந்து கல்வி அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
விண்ணப்பதாரி 2008ஆம் ஆண்டு அல்லது பொதுக் கலைத் தகைமை (வெளிவாரி) பரீட்சை (ஆங்கிலப் பாடத்துடன்) மற்றும் விஞ்ஞானமானி (வெளிவாரி) முதற்பட்டப் பரீட்சையில் சித்தியடைந்திருக்க வேண்டுமெனவும் நிரந்தர ஆசிரியராக 5 வருட ஆசிரியர் சேவையைப் பூர்த்தி செய்திருக்க வேண்டுமெனவும் ஆசிரிய கல்லூரி, கல்விக் கல்லூரி, பல்கலைக்கழகம் என்பவற்றிலோ தேசிய கல்வி நிறுவகத்தின் பாடநெறிகளைத் தொடர்வதற்காக பதிவு செய்யாதவராக இருக்க வேண்டுமெனவும் கல்வி அமைச்சு நிபந்தனையும் விதித்துள்ளது.
கல்வி அமைச்சின் விதிமுறைகளுக்கமைய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணபங்களை கல்வி அமைச்சன் மனிதவள அபிவிருத்திப் பிரிவுக்கு பதிவுத் தபாலில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்க வேண்டுமென அமைச்சின் செயலாளர் விண்ணப்பத்தாரிகளை அறிவுறுத்தியுள்ளார்
.jpg)
Post a Comment