கல்முனை கல்வி வலய மாணவர்களுக்கான ஐந்தாம்தர புலமைப்பரிசில் முன்னோடிப் பரீட்சை
(யு,எம்,இஸ்ஹாக்)
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள 63 பாட சாலைகளில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை நாளை சனிக்கிழமை (20) நடத்தப் படவுள்ளது. கல்முனை வலயக்கல்வி அலுவலகம் அமானா வங்கியின் அனுசரணையுடன் இந்தப் பரீட்சையை நடாத்தவுள்ளது.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் அவர்களின் வழிகாட்டலில் கல்முனை கல்வி வலயதுக்குட் பட்ட ஐந்து கோட்டக்கல்விப் பணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் 29 பரீட்சை நிலையங்களில் இந்த பரீட்சை நடை பெறவுள்ளதாக கல்முனை வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளரும் முஸ்லிம் பிரிவுக்கான கோட்டக்கல்விப் பணிப்பாளருமான பீ.எம்.எம்.பதுர்தீன் தெரிவித்தார்

Post a Comment