Header Ads



'முஸ்லிம்கள் இழிவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை என்னால் நம்ப முடியாது' - மஹிந்த


(இக்பால் அலி)

மஹியங்னை பள்ளிவாசல் விடயம் சம்பந்தமாகவும் மற்றும் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நெருக்குதல் கொடுப்பதாக பரவலாக நாட்டிலும் சர்வதேச இணையத்தலங்களிலும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலமை சம்பந்தமாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் மிகவும் நெருக்கம் கொண்டவர்களான மாத்தளை நகரபிதா ஹில்மி கரீம் குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் ஜனாதிபதி அவர்களுடன் முக்கிய சந்திப்பொன்றை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மிகவும் மனவேதனையுடன் சில கருத்துக்களை பரிமாரினார் பலாங்கொட பிரதேசத்தில் முஸ்லிம் வியாபாரி ஒருவரால் இளம் பிக்கு ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் காரணமாக  முஸ்லிம்களுக்கு எதிராக ஒருகொந்தளிப்பு நிலை ஏறபட்டபோது தான் பிரத்தியேகமாக தலையிட்டு இந்த விடயத்தை ஊடகங்களுக்குக் கூடசெல்லாத முறையில் பாதுகாத்ததாகவும் இதேபோல் முஸ்லிம் ஒருவரால் வெளிமடையில் எட்டு வயது சிறுமி ஒருவர் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்றும் நடந்ததாகவும் கூறியதோடு கடந்த சில  காலங்களில் இப்படியான பல பிரச்சனைகள் சம்பந்தமாக தான் நேரடியாக தலையிட்டதாகவும் முஸ்லிம்கள் இப்படியான இழிவான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தன்னால் நம்ப முடியாது எனவும் இப்படியான துர் நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லிம்களுக்கெதிராக ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்றதுடன்   அரசாங்கத்திலிருக்கும் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தவறான முறையில் சிறிய பிரச்சனைளை அரசியல் இலாபத்திற்காக தூக்கிப்பிடிப்பதால் பிரச்சனைகள் தலையெடுப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மஹியங்னை பள்ளிவாசல் விடயத்தை தான் சுமுகமான முறையில் தீர்ப்பதற்குறிய அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் முஸ்லிம்ளை நம்பிக்கையோடு இருக்குமாறும் குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

11 comments:

  1. பெரும் பான்மயறினால் மேற்கொள்ளப்பட்ட கொடிய இனப்பிரச்சியின் விலயிவால் நாட்டில் இந்த அராஜகம் தோன்றியது அன்றி முஸ்லிம்களால் மற்றும் அல்ல. சமீபத்தில் கொழும்பில் 5 மாத பச்சிளம் குலந்தயயொன்று கற்பழிக்கப்பட்டது உலகறிந்த விடயம் . ஒரு நாலயிக்கு இலங்கையில் 18(90 நிமிடங்களுக்கு 1) என்ற அடிப்படையில் கற்பலிப்பு/ 5 கொலைகள் இலங்கையில் நடக்குது. முக்கிய காரணம் நாட்டில் சட்டம் நீதி நேர்மை இன்றியே.

    ReplyDelete
  2. ஒவ்வொருத்தனும் அவ்னவனுக்கு சாதகமா நடிக்காண்டா.....

    ReplyDelete
  3. ஜனாதிபதி அவர்களே முஸ்லிம்களின் ஓரிருவரின் இழி நடவடிக்கைக்காக ஏன் முழு சமூகத்தின் உயிர் நாடிகளான பள்ளிவாசல்களை தாக்க அனுமதிக்க முடியும்...??? அந்த நடவடிக்கைகளின் ஈடுபடும் ஈனர்களை சட்டத்தின் மூலம் அதி உச்ச தண்டனை வழங்கி தண்டியுங்கள் ...முடிந்தால் நீங்கள் குறிப்பிட்டது போல ஷரியா சட்ட தண்டனையை முஸ்லிம் பெயர் தாங்கி இழி செயல்களில் ஈடுபடுவோருக்கு வழங்குங்கள் ...ஆனால் உங்கள் அரசியல் ஆதாயத்துக்காக உங்கள் ஆதரவாளர்களை பாதுகாத்து,உங்கள் எதிரிகளை ஒழித்து கட்டும் வகையில் மட்டும் செயல்பட முனையாதீர்கள்....

    ReplyDelete
  4. அப்படி என்றால் ஷரீஆ சட்டத்தை இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மட்டும் அமுல்படுத்த முடியும் என்றா சொல்ல வருகின்றீர்கள் ஜனாதிபதி அவர்களே...?

    ReplyDelete
  5. அப்துல் சத்தார் ரெம்பவும் அடங்கிவிட்டார் அல்லது அடக்கிவிட்டார்கள் போலும் அர்சுக்கு பேரிடி கொடுக்கப்போவதாக சொல்லிவிட்டு இப்படியாகிட்டார் அரசியல்வாதி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். ஆமா ஜனாதிபதி என்னவோ வருத்தமா சொன்னாராம் இவங்க கேட்டுவிட்டு என்ன சொன்னாங்களோ ஒரு தனி மனிதன் செய்த தவறை ஒரு சமூகத்தின்மீது எப்படி போடுவது சிங்களவர்கள் என்ன தவறு செய்யாமலா இருக்கிறார்கள் அவர் மறைத்ததாக சொல்லி நாடு முழுக்க தெரிய இப்போ சொல்லிவிட்டாரே எல்லாம் இவர்களது நடிப்பு தப்பு பன்னினா யாராக இருந்தாலும் தண்டி நாங்க வேண்டாம் என்றா சொன்னோம் சத்தார் நீங்களும் மஹிந்தையிடம் சரணாகிட்டிங்க....

    ReplyDelete
  6. Janathipathi enna noakkaththidkaaka sonnaaroa? Athu vaeru vidayam. Intha santharppaththai payanpaduththi ACJU shariah saddaththai mudhalil srilankavil muslimkaluku amulpaduththa munaiyavaendum. Meethiyai Allah paarththukolvaan. Athisdam orumuraithaan kadhavai thaddum. Usaar ACJU.

    ReplyDelete
  7. Do or die we have to start protest against to mahinda government. his view is like child. this group siting with him they also like child listing and wasting time. what nonsense his talking any one commit crime catch and punish him according to our country law and constitution why are u close the mosque? really inviting trouble for srilanka you and ur brother.your good time UNP not strong that's the reason. don't forget u close house of Allah.wait and see.

    ReplyDelete
  8. Why His.Ex.president acts as childish? NO Muslims, No buddhists, No Hindus, No Christians No Burghars ect... all are same under the rule of law. Punish them if found guilty and save the community without going to another destruction.

    ReplyDelete
  9. அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு
    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஒரு முஸ்லிம் எப்போதும் மனிதர்களிடம் காணப்படும் நல்ல விடயங்களையே காண வேண்டும் .அந்த வகையில் நமது ஜனாதிபதி அவர்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார்கள் .அல்ஹம்துலில்லாஹ் .இதன் மூலம் நம் நாட்டில் முழுமையாக வட்டியில்லாத வங்கியமைப்பு திட்டம் ஒன்றை
    எமது உலமாக்கள் எமது ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து அதனை நடைமுறைப்படுத்துவார்களானால் அது இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
    எமது முஸ்லிம் சமூகத்தினால் செய்யப்படும் பேருதவியாக அமையும் .

    ReplyDelete
  10. அதி மேதகு ராஜபக்ச அவர்களே !

    இஸ்லாமியர்களுக்கு ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று நீங்களா சொல்றீங்க .. நம்ப முடியல்லயே ..

    ஒரு வாரங்களுக்கு முன்னால் கல்கமுவயில் மூன்று பிள்ளைகளின் தாய் தொடர்ந்து பணத்துக்காக கண்ட கண்ட களுசறைகளுக்கு கட்பை விற்று வியாபாரம் செய்து வருகிறாள் என்ற செய்தி பல தடவைகள் பள்ளி வாசல் நிர்வாகத்துக்கு கிடைத்தும்கூட ஷரீஆ சட்டத்தை அமுல் படுத்திக்கொள்ள முடியாததால் ( கல்லெறிந்து கொல்லப்படவேண்டியவள் ) அவளை விசாரணைக்காக பள்ளிவாசலுக்கு அழைத்த போது தராவீஹ் தொழுகைக்காக சமூகமான சில பெண்களே சேர்ந்து அவளை எச்சரிக்கும் படியாக முடியை கத்தரித்ததுக்கே இன்று ஊடகங்களிலே தவறாக நடந்து கொண்டார்கள் என்று பரவலாக பேசப்படும் போது நம்ம தலைவர் இப்படியா சொல்கிறார்

    ReplyDelete
  11. சரியா சட்டத்தை இங்கு அமுல்படுத்தலாம் என்றால் ஏன் halal விடயத்தை எதிர்க்க வேண்டும். இதை எல்லாம் நம்ப நாங்கள் தாயார இல்லை. தமிழ் இனம் ஒடுக்கப் பட்டாயிட்டு இனி முஸ்லிம்கள் தான் பலிக்கடா. நாம் அவதானமாகவும் பொறுமையுடனும் இருந்தால் இறைவன் எம் பக்கம் இருப்பான்.

    ReplyDelete

Powered by Blogger.