ராஜசிங்க மன்னனால் போஷிக்கபட்ட மஹியங்கனை முஸ்லிம்கள் மஹிந்தவினால் தூக்கி வீசப்படுவார்களா?
(தொகுப்பு :- எ எம் எம் முஸம்மில்- பதுளை)
வேடுவர்களாகவும் , காட்டுவாசிகளாகவும் இந் நாட்டில் வாழ்ந்த இயக்கர் , நாகர் கோத்திரங்களை, அகிம்சா தர்மமாம் பௌத்த மத சிந்தனைகளின் அடிப்படையில் பௌத்த கலாசாரம் (பௌத்த நாகரீகம்) கட்டியெழுப்ப பட்டதாகவே நாம் இந் நாட்டு வரலாற்றை அறிந்துவைத்துள்ளோம். இந் நாட்டின் பிற்கால மன்னர்கள், பௌத்தத்தை தமது சமயமாக ஏற்று அதை அரச மதமாகவும் பிரகடனபடுத்டதியதால், பௌத்த மதத்தின் சித்தாந்த ரீதியான அகிம்சை , கருணை , அன்பு போன்ற உயரிய குணாதிசயங்களால் இந் நாட்டு மக்கள் சமூக மயமாக்கப்பட்டு பண்பாட்டு நாகரீக ரீதியாகவும் இந்நாட்டை வளர்ச்சி பெற செய்தார்கள்.
சுதேசிகள் மட்டுமன்றி சர்வதேச வர்த்தக வியாபார நோக்கில் இங்கு வந்த பிற நாட்டவர்களும் இந்த நாட்டு மன்னர்களின் மேற்குறித்த சமய ரீதியிலான அனுசரணைகளை பெற்றார்ககள். அதன் காரணமாகவே சர்வதேச வர்த்தகத்தில் இந்தநாட்டை பிணைப்பதிலும் உள்நாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதிலும் வெற்றி கண்டார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் இந்த விடயத்தில் பாரிய பங்காற்றியுள்ளார்கள் என்பதை இந்த நாட்டின் பல வரலாற்று ஆசிரியர்கள் பல ஆதாரங்களை முன்வைத்து நிறுவியுள்ளார்கள் ,
1505இல் போர்த்துகேயர் இலங்கைக்கு காலடி எடுத்து வைத்த போது இலங்கையின் வர்த்தகம் முஸ்லிம்களின் கைகளில் இருந்துள்ளது . கொழும்பு சனத்தொகையில் பெரும் பான்மையானோர் முஸ்லிம்களாகவே இருந்துள்ளனர் . போர்த்துகேயருக்கு எதிராக முதன் முதலில் போராடியவர்கள் முஸ்லிம்கள்தான். முஸ்லிம்களின் கையில் இருந்த வாசனைத் திரவிய வர்த்தகத்தை போர்த்துகேயர் அபகரிக்க முயற்சிசெய்த போது அதற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடினார்கள். அப்போராட்டம் வர்த்தக யுத்தமாக இருந்தாலும் கூட அது காலனித்து வத்திற்கெதிரான போராட்டமாகவும் இருந்தது. அதன் பின் கரையோரப் பிரதேசங்களைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர், முஸ்லிம்களை கொழும்பிலிருந்து . கண்டி இராஜ்ஜியத்திற்கு இடம்பெயர்ந்தார்கள். அவர்களுடைய போராட்ட உணர்வை கண்டிய மன்னர்கள் கெட்டித்தனமாக பயன்படுத்திக் கொண்டனர்.
கோட்டைப் பகுதியிலிருந்து கண்டிக்குச் செல்லக்கூடிய அனைத்து கனவாய் வாயில்களிலும் முஸ்லிம்களைக் குடியேற்றிய கண்டி அரசர்கள், தமது அரசைப் பாதுகாப்பதற்கு காவலரணாக முஸ்லிம் குடியேற்றங்களை அமைத்தனர். மாவனல்ல, மடவள, அக்குரனை. கம்பளை, உக்குவெல, மகியங்கன ( பங்கரகம்மான ), குருநாகல் போன்ற பகுதிகளில் முஸ்லிம் கிராமங்கள் இருப்பதற்கு இதுவே காரணம். பின்னர் பிரித்தானியா காலத்தில் முஸ்லிம்களுக்கெதிரான தடை தளர்த்தப்பட்ட பிறகு மீண்டும் அவர்கள் மறுபடியும் படிப்படியாக கொழும்புக்கு நகரத்தொடங்கினர். இக்காலப்பகுதியில்தான் இந்தியாவில் இருந்து வந்த பல்வேறு முஸ்லிம் சமூகத்தவரும் கொழும்பில் தமது வியாபாரத்தை நிறுவி இலங்கையின் முழு வியாபாரத்தினையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துளார்கள்.
குமாரி ஜெயவர்த்தனாவின் ஆய்வின்படி 1880களில் புறக்கோட்டை வியாபாரம் 86 செட்டி நிறுவனங்களினதும்;, 64 முஸ்லிம் நிறுவனங்களினதும் கட்டுப்பாட்டில் இருந்துள்ளதது. ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் 7 போரா முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளன. இவர்கள் தமக்குச் சொந்தமான கப்பல்களைக் கொண்டிருந்தனர். நடுத்தர வியாபாரமும், சில்லறை வியாபாரமும் இந்திய தமிழர் வசமும், மலையாளிகள் வசமும் இந்திய கரையோர முஸ்லிம்கள் வசமும் இருந்ததுள்ளன. கொழும்பில் மாத்திரமல்ல நாட்டின் எல்லா நகரங்களிலும் வியாபாரம் முஸ்லிம்களின் வசமே இருந்தது. பல பிரதேசங்களில் பள்ளிவாசல்கள் இருந்தன. சகல நகரங்களிலும் இறைச்சிக்கடைகள், தையல்கடைகள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இலங்கை சுதந்திரம் பெறும் வரையில் முழு கொழும்பிலும் இருந்த அநேகமாக அனைத்து பிரமாண்டமான தனியார் கட்டிடங்களும் இரண்டு முஸ்லிம் குடும்பத் திற்கு சொந்தமாக இருந்துள்ளன.
1889ல் ஆள்பதி கோர்டன் (Sir Arthur Hamilton Gordons) எம் சி அப்துல் ரஹ்மான் என்ற பெரும் தனவந்தரை சட்ட நிருபணசபைக்கு (அப்போதைய பாராளுமன்றம்) முஸ்லிம் பிரதிநிதியாக நியமித்தான். அதன் பின்னர் இன்றும் உயிரோடிருக்கின்ற எம்.எச் முகம்மது வரை சேர் ராசிக் பரீத் உட்பட இக்குடும்பத்தைச் சேர்ந்த பலர் தொடர்ச்சியான முஸ்லீம் தலைவர்களாக இருந்து வந்துள்ளனர். அப்துர் ரஹ்மான் எத்தகைய பணக்காரர் என்பதற்கு சில உதாரணம். இன்று ஐ.தே.கட்சியின் தலைமைக் காரியாலயமாக இருக்கின்ற ஸ்ரீ கொத்தா அவர் வாழ்ந்த மாளிகை இருந்த இடமாகும். அவரது பேரன் ஐ.தே.கட்சிக்கு அதனைக் கொடுத்தார். இலங்கையில் சபாநாயகர் வாழ்கின்ற மும்தாஜ் மஹால் அவரது மகளுக்கு அவர் கொடுத்த வீடு. பொரல்ல கனத்தை மயானம் அவரது குதிரைகள் மேய்வதற்கான புல்வெளித் திடல். அவரது உறவினரான அப்துல் கபூர் என்பவரே கோட்டையில் இருக்கின்ற பெரிய கபூர் கட்டிடத்தின் சொந்தக்காரர்.
விமான சேவை வழக்கிலில்லாத அக்காலகட்டத்தில், இலங்கைக்கு வரும் அனைத்து கப்பல்களுக்குள்ளே போய் வைரக்கற்களை விற்கின்ற தனி உரிமை அவருக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் முழு வைர வியாபாரமுமே அவரது கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கோட்டைப் பிரதேசத்தில் காணப்படும் பெரு மளவு கட்டிடங்கள் அனைத்தும் அவர்களது குடும்பத் திற்கே சொந்தமாக இருந்தது. இன்று கொழும்பிலி ருக்கின்ற ஹொலிடே இன் ஹோட்டல் (அது ஜபீர் ஏ காதர் குடும்பத்திற்கு சொந்தமானது. அக்குடும்பமும் அப்துர் ரஹ்மான் குடும்பத்தின் கிளைதான்) கொள்ளுப் பிட்டியில் அதனைச் சுற்றியிருக்கின்ற பிரமாண்டமான கட்டிடங்கள் அனைத்தும் இவர்களுக்கே சொந்தமாக இருந்துள்ளது.
அதேபோல் அன்று இலங்கையில் மிகப்பெரும் கட்டிடக்கலை நிபுணராக உம்பிச்சி முஹம்மது என்பவர் இருந்தார். அவரால் கட்டப்பட்டதுதான் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டல், கொழும்பு மணிக்கூட்டுக் கோபுரம், புறக்கோட்டை பழைய சந்தை, பழைய தபாற்கந்தோர் போன்ற கட்டிடங்கள். அழகான பள்ளி வாசல்களை இவர்கள் கட்டினார்கள். தமது பிள்ளைகளும் உறவினர்களும் இஸ்லாமிய முறைப்படி கல்வி கற்பதற்கான முஸ்லிம் பாடசாலைகளை ஆரம்பித்தனர் ஆனால் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கவில்லை. சமூகப் பற்றோ மொழிப்பற்றோ இருக்கவில்லை. இவர்கள் ஆங்கிலத்திலும், ஒரளவு சிங்களத்திலும், தமிழிலும் பேசினர். இவர்களது தாய்மொழி ஆங்கிலமா சிங்களமா என்று கூறமுடியாது. ஆனால் தமிழ் இவர்களுக்கு மூன்றாம் மொழி. அவர்களுக்கு கொழும்புக்கு வெளியே வாழும் முஸ்லிம்களைப் பற்றியோ முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினை பற்றியோ புரிதல் இருக்கவில்லை. 1956 சிங்களச் சட்டம் வந்தபோது அதற்கு ஆதரவாக சேர் ராசிக் பரீத் வாக்களித்தது இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
பிற்காலத்தில் சிங்கள இனவாத சக்திகளால் சீர்குலைந்த சிங்கள முஸ்லிம் உறவு
1915 மே 28 இனக்கலவரம் 1915ம் ஆண்டு முஸ்லிம்களுக்கெதிரான கலவரம்தான் இலங்கை வரலாற்றில் ஏற்பட்ட முதலாவது இனக் கலவரமாகும். 1915 இனக்கலவரம் வெடிப்பதற்கு சற்று முன்னர் அநாகரிக தர்மபால முஸ்லிம்களை “யூத சைலொக்கள்” என்றும், அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிப்ப வர்கள் என்றும் வர்ணித்தார். சிங்கள மக்கள் ஏழைகளாகவும் வியாபார அறிவு அறவே இல்லாதவர்களாகவும் வாழும் போது இந்திய முஸ்லிம்கள் இந்த நாட்டுக்கு வந்து அப்பாவி சிங்களவர்களை ஏமாற்றி செல்வந்தர்களாக ஆகி, ஆடம்பரமாக வாழ்வதாக பிரச்சாரம் செய்தார்.
1915 இனக்கலவரம் கம்பளைப் பள்ளிவாசல் பிரச்சினையில் தொடங்கி கண்டியில் காசல் ஹில் வீதியிலுள்ள பள்ளிவாசலில் வெடித்தாலும் கொழும்பு, புத்தளம் போன்ற பகுதிகளுக்கு வேகமாக பரவியதன் காரணம் அப்போது இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் அநாகரிக தர்மபால போன் றோரால் உருவாக்கப்பட்டிருந்த மனோபாவமேயாகும். அன்றைய புள்ளிவிபரங்களின்படி 4075 வீடுகளும், கடைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.. 350 கடைகள் முற்றாகவே எரிக்கப்பட்டன. 17 பள்ளிவாசல்கள் தீக்கி ரையாக்கப்பட்டன. 86 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. 25 பேர் கொல்லப்பட்டனர். 189 பேர் காயங்களுக்குள்ளானார்கள். 4 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பல பெண்கள் விபரங்களை வெளியில் சொல்லவில்லை. அதுவரை இத்தகைய ஒரு இனக்கலவரத்தையும் பேரழிவையும் இலங்கை கண்டதில்லை.
பிற்காலத்தில் 1983 இல் வீரியம் பெற்ற தமிழர்களுக்கு எதிரான யுத்தம், 2௦௦9ம ஆண்டு முள்ளிவாய்க்காலலில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை இலங்கையின் இரண்டாவது சுதந்திரம் என்று அழைக்கப்படுவதுடன் இந் நாட்டின் பௌத்த மேலாண்மை வாதம் மேலும் இஸ்திரப் படுத்தபட்டுள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்ற பிறகு தமிழர்களுக்கு எதிரான யுத்தம் எவ்வாறு ; தமிழர்களை அரசியல்ரீதியாக இரண்டாம் பிரஜைகளாக்குவதாக கொண்டிருந்ததோ, முஸ்லிம்களுக்கு எதிராக தற்போது தொடுக்கப் பட்டிருக்கும் நிழல் யுத்தம் அவர்களை பொருளாதாரரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இரண்டாந்தர பிரஜைகாளாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந் நாட்டு நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் பௌத்த தர்மத்தின் அனுசரணையை பெற்ற இலங்கை பல்லின சமூகம் 19௦௦ காலப் பகுதியில் அநகாரிக தர்ம பால போன்றவர்களால் முன்னெடுக்கப் பட்ட பேரினவாத பிரச்சார நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்டு பௌத்த தர்மத்தின் அடிப்படை சித்தாந்தங்களில்கூட தாக்கம் செலுத்தியுள்ளது. உலக மக்களின் சாந்தியை சமாதானத்தை போதித்த பௌத்தம் இன்று பௌத்தர்களின் சாந்தி சமாதானத்திகாக ரௌத்திரம் போதிககின்றது. வைராக்கியத்தால் வைராக்கியத்தை வெல்லமுடியாது என்ற புத்த பகவானின் போதனைகளை புறந்தள்ளிவிட்டு ஒருகையில் துப்பாக்கியையும் இன்னொருகையில் பௌத்த தர்மத்தையும் ஏந்தியே நமது படைவீரர்கள் யுத்தம் புரிந்தார்கள் என்று யுத்ததிற்கு நியாயம் கற்பிக்கும் வரை பௌத்தம் களங்கப் படுத்தப் பட்டுள்ளது.
இந்த நிலைமை இன்று இலங்கையை தாண்டிய பௌத்த தேசங்களிலும் வெளிப்படையாகவே காண முடிகின்றது . இஸ்லாத்திற்கு எதிரான சர்வதேச அரசியல் நிகழ்ச்சி நிரலும் இதனூடாக கத்சிதமாக முன்னெடுக்கப் படுகின்றது.
இலங்கையில் போன்றே பர்மாவிலும் முஸ்லிம்கள் துவம்சம் செய்யப் படுகின்றார்கள். இந்த இன அழிப்பு பகிரங்கமாகவே அறிவிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாகவே அழித்து ஒடுக்கப் படுகின்றார்கள் , அதிலும் கவனிக்கத்தக்க விடயம் பௌத்த துறவிகள் முன்னின்றே இத்தாக்குதல்களை வழிநடத்துகின்றாரகள். துனபங்களுக்கெல்லாம் பிரதான காரணம் மனிதனின் பேராசைதான் என்ற அடிப்படையை மக்களுக்கு உபதேசம் செய்த , உயிர் வதையை மறுத்து எல்லா உயிர்களும் துக்கமற்று வாழ வலி சொன்ன புத்தரின்போதனைகளை தன வாழ்க்கை நெறியாக ஏற்ற பௌத்த பிக்குகளே இத்தாக்குதல்களை வழிநடத்துகின்றாரகள்.
தம்புள்ள பள்ளிவாசல் தாக்குதலுடன் வீரியம் கொண்ட முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்போது மஹியங்கனை பள்ளிவாசலுக்குள் பன்றியை வெட்டி வீசி .தாக்குதல் நடத்தி அதை நிரந்தரமாக பூட்டிவிடும் முயற்சி வரை அண்மைய குறுகிய காலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி நிரலானது இந் நாட்டு முஸ்லிம்களின் நாளைய இருப்புக்கு பாரிய அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
மஹியங்கனை நகரம் புத்தனின் பாதம் பட்ட புண்ணிய நகரம் என்று சொல்கிறார்கள் . அந்த நகரத்தில் அமைந்த இன்னுமொரு சமூகத்தின் ஒரு சிறு மத அனுஷ்டான நிலையத்தின் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்தப்பட்டு. முழு நாட்டினதும் அவதானம் அதன் மீது பதிவாகியுள்ளது
ஆகவே இந்த நாட்டை மீண்டும் ஒரு கொலைக் களமாக மாற்றி விடாமல், முஸ்லிம்கள் மீது நடந்து கொண்டிருக்கும் இவ்வடாவடி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த இந்த நாட்டின் ஆட்சியாளன் என்ற வகையில் ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டிய உரிய தருணம் இதுவென இலங்கை முஸ்லிம்கள் எதிர் பார்கின்றனர்.
இலங்கையின் கடைசி மண்ணான ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தன்னை விரட்டி வந்த ஆங்கிலேயர்களிடமிருந்து தப்பித்துகொள்ள மஹியங்கனை நகரினூடாக பயணம் மேட்கொண்டிருந்த வேலை பங்கரகமை என்ற கிராமத்திநூடாகவே சென்றுள்ளான். பாத்திமா என்ற முஸ்லிம் விவசாய பெண், நெல்மணிகளை காயவைத்துகொண்டிருந்த வேலை மன்னனை கண்டு நிலைமையை புரிந்துகொண்டு பக்கத்திலிருந்த மரத்தின் மறைவில் மன்னனை மறைத்து மனனனுக்கு அபயமளித்தாள். அந்த வழியாக வந்த ஆங்கிலேயர்கள் குறித்த இந்த முஸ்லிம் பெண்ணிடம் மன்னனை பற்றிவினவி இந்த பெண் தான் மன்னனை ஒழித்துவைத்துள்ளாள் என்று அறிந்து அப்பெண்ணை கொன்றுவிடுகின்றனர்.
இந்த நாட்டு மன்னனின் உயிர் காத்த உத்தமியான இந்த பெண்ணின் குடும்பதார்களுக்காக சன்மானமாக பங்கர கம என்ற ஊரையே உயில் எழுதி கொடுத்ததாக வரலாறு, கூறுகின்றது. பங்கரகம கிராமத்திற்காக எழுதப்பட்டஉயில் 1956 வரை பதுளை கச்சேரியில் இருந்ததாக பங்கர கமையை சேர்ந்த காலம் சென்ற அப்துல் மஜீது என்ற முதியவர் ஒரு முறை கூறியுள்ளார். இந்த வரலாற்று சம்பவம் 1982ம் ஆண்டில் பதியப்பட்ட அப்போதைய ஆண்டு மூன்று தமிழ் பாடநூலில் கூட பதிவு செய்ய பட்டுள்ளது. மா ரெக லே என்று கருத்துப்படும் மரக்கலையா என்ற முஸ்லிம்களை நோக்கி கூறப்படும் அடைமொழி கூட இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்தே கூறப்படுவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகின்றது.
இவ்வாறு சிங்கள மன்னன் ஒருவனின் கௌரவத்திற்கும் , மரியாதைக்கும் பாத்திரமான மஹியங்கனை பங்கரகம கிராமம் இன்று சுமார் 800 முஸ்லிம் குடும்பங்களுக்காக 12௦௦ வாக்காளர்கள் சகிதம். ரோகன , தம்ப கொள்ள ,எட்டு வீடு , நாலு வீடு என்ற நான்கு குக்கிராமங்களை கொண்டு. ஒரு ஜும்மாபள்ளிவாயில் மற்றும் நான்கு தகியாக்கள் உட்பட ஒரு பாடசாலையுடனும். தொன்மை நிறைந்த கிராமமாக திகழ்கின்றது. இவ்வூரிலிருந்து சுமார் 2௦ கும் மேற்பட்ட உலமாக்களும் 8 ஆசிரியர்களும் உருவாகி இருக்கின்றார்கள்.
இவ்வூரிலிருந்து முதன் முதலில் உருவான இரண்டு உலமாக்களில் ஒருவரான மௌலவி அழ ஹஜ் இஷாக் சஹ்ரி அவர்கள் . பதுளை மாவட்ட காதி நீதுவானகவும் ,பதுளை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவராகவும் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் முக்கியஸ்தராக உள்ளார். இனொரு உலமாவான அஸ்ஸைஹ் அல் ஹாஜ் எம் எச் செகுதீன் மதனி அவர்கள் இலங்கை அல் ஹிக்மா நலன் புரி அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளராக கடமையாற்றுகின்றார். மேற்படி உலமாக்களின் சேவையை இன்று பதுளை மாவட்டம் வேண்டிநிற்கின்றது
மிக அண்மைய காலம் வரை மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்த இக்கிராமம் 1993 ஆண்டிலேயே மின்சார வசதியை பெற்றது. 2௦௦9ம ஆண்டில் பதுளை மஹியங்கனை பாதையை இணைத்ததாக அமைந்த இவ்வூரை ஊடறத்து செல்லும் பாதை இக்கிராமத்தின் அபிவிருத்தியில் ஒரு மைல் கல்லாக கருதப் படுகின்றது.
350 மாணவர்களையும் 17 ஆசிரிரியர்களையும், தரம் ஒன்று முதல் 11 வரை வகுப்புகளையும் கொண்டு இயங்கும் 1௦௦ வருடங்களுக்கு மேலான வரலாற்றை கொண்ட
ப / பங்கரகமை முஸ்லிம் வித்தியாலயத்திலிருந்து 2௦11ம் ஆண்டிலேயே தரம் ஐந்து புலமை பாரிஸில் பரீச்சையில் ஒரு மாணவன் சித்திபெற்றுள்ளான்.
மஹியங்கனை நகர வாசிகளின் ஆதரவு அனுசரணையை பெற்று இதுகாலவரை அன்னியோன்யமாக வாழ்த்த இப்பிரதேச மக்கள் தமது வியாபார நடவடிக்கைகள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக சுமார் மூன்று மைல் தூரத்திலமைந்த மஹியங்கனை நகரையே நாடி இருந்தனர் .தமது அன்றாட தேவைகளுக்காக மகியங்கன நகரை நோக்கி வருபவர்களும் , சுமார் ஐம்பது வியாபார கடைகளை கொண்ட இப்பிரதேச முஸ்லிம்கள் வியாபாரிகளும் தமது அன்றாட சமய தேவைகளுக்காக ஒரு சிறு பள்ளியை நிறுவ வேண்டிய தேவையை உணர்ந்து , முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாச அவர்களிடம் இப்பிரதேச வாசிகளால் வேண்டுதல் விடுக்க பட்ட போது. தற்போதைய பஸ்தரிப்பு நிலையத்தின் அருகே ஒரு காணித்துண்டும் 1989 ஆண்டில் இதற்காக வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அவ்விடத்தில் குறித்த பள்ளியை கட்ட அனுமதிக்காததால் கடந்த 2௦ வருடங்களாக தற்போதைய இடத்தை பள்ளிவாசலாக உபயோகித்து வந்துள்ளனர் , அதை தான் இன்று புத்தரின் பாதம் பட்ட பூமி என்ற காரணத்தால் தாக்கியழிக்க வந்துள்ளார்கள் , இதுநாள் வரை அரவணைத்தவர்கள்.
குறிப்பிட்ட பள்ளிவாசல் அமைந்துள்ள கடைதொகுதியுடன் சேர்த்து இன்னும் இரண்டு கடைகளையும் இணைத்து அகற்றப் படவேண்டிய அனுமதி பெறாத கட்டிடங்கள் என்ற அடிப்படையில் இக்கட்டிடங்களை தகர்பதட்காக எதிர் வரும் 25ந் திகதி மஹியங்கனை பிரதேச சபையில் பிரேரணையொன்றை சமர்பிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் பிரதம தேரோ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நபத்தகுந்த செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளும் கட்சியின் மூன்றில் இரண்டு பலம் பொருந்திய இப்பிரதேச சபையில் குறித்த பிரேரணை முன்வைக்கப் படும்போது எதிர் நடவடிக்ககைகள் என்பது பூச்சியமாகவே இருக்கும். ஆகவே இவ்வரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் பெற்ற ஜனாதிபதியே இந்நடவடிக்கைகளை தடுக்க கூடியவர் அல்லது தீர்வு தர வேண்டியவர்.
பௌத்த மன்னன் ஒருவரின் தாரள தன்மையாலும் , தயவாலும் வராலாறு எழுதப்பட்ட மண்ணிலிருந்து இன்னொரு பௌத்த மன்னனான மஹிந்த ராஜபக்ஷ மூலமாக நன்றி கெட்டவரலாறொன்று எழுதப்படக் கூடாது என்பதுவே இன்றைய முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாகும .நன்றி :- பி ஏ காதர் (இணையம்)

இவருக்கு முஸ்லிம் அரசியல் வரலாறு தெரியாது என்று நினைக்கிறேன். 1889ல் அப்துல் ரகுமான் சட்ட சபைக்குத் தெரிவு செய்யப் படுவதற்கு முன் பொ. ராமனாதன் முஸ்லிம்களுக்கு பிரத்தியேகமான பிரதிநிதி தேவையில்லை. தமிழர்களே முஸ்லிம்களைப் பிரதிநிதிப் படுத்துவார்கள் என்று சொன்னதற்கு எதிராகவே முஸ்லிம் தலைவர்கள் அன்று முஸ்லிம்களுக்கு தனிப் பிரதிநிதியைத் தெரிவு செய்தார்கள். இவர்கள் இதைச் செய்தது சமூகத்திற்காகவே அன்றி சுய இலாபத்துக்காக அல்ல.
ReplyDelete