அறபுக் கல்லூரி மாணவர்களைப் புகழ்ந்த பௌத்த பிக்கு
கெலிஓயா நகரில் நடைபெற்ற ஒரு சம்பவம் கெலிஓயா பகுதியில் முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் பௌத்த சகோதரர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கெலிஓயா நகரில் இருந்து கண்டிக்கு செல்வதற்காக அறபுக்கலாசாலை மாணவர்கள் மூவர் பஸ் நிலையத்தில் காத்து நின்றுள்ளனர். இவர்கள் 14 முதல் 18 வயதிற்குட்பட்ட மாணவர்களாவர்.
இச்சமயத்தில் கம்பளையில் இருந்து கண்டி நோக்கி செல்ல வந்த பஸ் வண்டியில் இருந்து இறங்கி வந்த பௌத்த பிக்கு ஒருவர் மாணவர்களுடன் மிகவும் அன்புடன் அலவளாவியுள்ளார். இவர்கள் அணிந்திருந்த வெண்ணிற ஜுப்பா ஆடை பிக்குவை மிகவும் ஈர்த்துள்ளது.
இம்மாணவர்களுடன் மிகவும் அந்நியோன்யமாக நடந்து கொண்டதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் பிக்குவை அணுகிய போது குறித்த பிக்கு அவர்களைப் பொது மக்கள் மத்தியில் மிகவும் காட்டமாக கண்டித்துள்ளார்.
இவர்களின் முன்மாதிரியைப் பாருங்கள். இந்த மாணவர்களின் முகத்தில் இருக்கும் புன்னகை உங்களிடம் இல்லையே? மாட்டிறைச்சியை சாப்பிட்டுக் கொண்டு மாடு வெட்டுவதை எதிர்க்கின்றீர்கள்? என்று அவர் அவர்களை கண்டித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

GREATE
ReplyDeleteசரியான முறையில் புத்தரின் போதனையை பின்பற்றக்கூடிய காவி உடை அணிந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .
ReplyDeleteகல பொல சேனாவினர் காவி உடைக்குள் கட்சிதமாக களங்கத்தை உண்டு பண்ணுகிறார்கள்
amam nalla vaittil piranthavar..
ReplyDelete