ஒருவருக்கொருவர் மாறி மனித ரத்தம் குடிக்கும் தம்பதி
அமெரிக்காவின் சப் போல்க் பகுதியில் உள்ள ஹவர்கில் என்ற இடத்தை சேர்ந்தவர் அரோ டிராவென் (38). 5 குழந்தைகளுக்கு தந்தையான இவர் வேலை இல்லாமல் சுற்றி திரிந்தார்.
அதே பகுதியை சேர்ந்த பெண் லியா பெனின்காப் (20). இவர் அரோ டிராவெனை சந்தித்தார். அப்போது அவர்களுக்கு இடையே நட்பு உருவாகி அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவரும் தங்களது ரத்தத்தை ஒருவருக்கு ஒருவர் மாற்றி குடித்து வருகின்றனர். வாரத்தில் 4 தடவை இதுபோன்று செய்வதாக ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் காத் எனப்படும் பழங்கால ஜெர்மனியர்கள் போன்று வாழ்வதாக கூறுகின்றனர். மேலும், இதுபோன்று ரத்தம் குடிப்பது எங்கள் இருவரது நட்பையும் மிகவும் நெருக்கமாக்குகிறது.
எங்களை பலசாலிகளாகவும், நல்ல உடல் நலத்துடன் கூடியவர்களாகவும் ஆக்குகிறது என்றும் தெரிவிக்கின்றனர். தங்களது உடல் பலவீனமாவது போன்ற உணர்வு ஏற்பட்டவுடன் ஒருவரது ரத்தத்தை ஒருவர் மாறிமாறி குடிப்பதாகவும் கூறுகின்றனர்.

Post a Comment