ஓவியம் வரையும் ரோபோ
ஓவியம் வரையும் ரோபோவை ஜெர்மன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல விதங்களில் ரோபோ என்ற எந்திர மனிதன் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது ஓவியம் வரையும் ரோபோவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை ஜெர்மனியில் உள்ள கான்ஸ்டேன்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இந்த ரோபோ 24 வகையான பிரஷ்களை பயன்படுத்தி அழகிய ஓவியங்களை வரைந்து தள்ளுகிறது.
தானாகவே பிரஸ் எடுத்து அதை கலரில் தேய்த்து ஓவியம் வரைகிறது. பின்னர் அதை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்கிறது. இந்த ரோபோவுக்கு 'இ–டேவிட்' என நிபுணர்கள் பெயரிட்டுள்ளனர்.
இவை தானாக பிரஸ் எடுத்து ஓவியம் வரையும் வகையில் அதில் சாப்ட்வேர் (மென்பொருள்) பயன்படுத்தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment