உலப்பனை இக்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அருகில் விபத்து - கல்விப் பணிப்பாளர் பலி
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
அட்டனில் இருந்து கண்டிக்கு அட்டன் வலய கல்விப் பணிமனை அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்த வேன் இன்று 12.07.2013 உலப்பனை எனும் இடத்தில் கோர விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதில் அட்டன் வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் அட்டன் வலய கல்விப் பணிப்பாளர் உட்பட மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இவ்விபத்து உலப்பனை இக்ரா முஸ்லிம் வித்தியாலயத்திற்கு அருகில் இன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து பிரதேச மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கண்டியில் இன்று மத்திய மாகாண ஆளுனர் பணிமனையில் நடைபெறும் கல்வி அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்ற அதிகாரிகளைக் கொண்ட வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இதில் அட்டன் வலய கல்வி;ப் பணிமனை ஆங்கிலப் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் பத்ரா ஜயவீர (36 வயது) என்ற இரு குழந்தைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.


Post a Comment