Header Ads



விளக்கம்..!

(இக்பால் அலி)

நவமணிப் பத்திரிகையிலும் ஜவ்னா முஸ்லிம் இணையத்தளத்திலும் சமீபத்தில் செய்தி பிரசுருக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி குறித்து தக்கியாப் பள்ளிவாசல் உரிமையாளர் எம். டப்லியூ. எம். பாரிசும் மற்றும்  இப்பள்ளிவாசல் தொடர்பாக முழு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் கண்டி லயின் பள்ளிவாசல் பிரதான பேஷ இமாமும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் முக்கிய பிரதிநிதியுமான அஷஷய்க் உமர்தீன் அவர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இக்காணியின் உரிமையாளரான ஏ. டப்லியூ. ஏ. பாரிஸ் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தக் காணி என்னுடைய 35 வயதில் தான் வசிப்பதற்காக வாங்கப்பட்ட காணியாகும். என்னுடைய தந்தையான மர்ஹூம் வஹாப்தீன் அவர்களுக்கு  எதிர்பாராத விதமான  நோய் ஒன்று ஏற்பட்டது. அப்போது தந்தையின் நோய் குணமடைய வேண்டும் எனக்கொண்டு என் தந்தை உயிருடன் இருக்கும் போதே அல்லாஹுக்காக வேண்டி தந்தையின் பெயரில் என் வீட்டை வக்பு செய்வேன் என்று உறுதி மொழி வழங்கினேன். அதன் பிரகாரம் 2006 ஆம் ஆண்டு அளவில்  என்னுடைய வீட்டை பள்ளிவாசலுக்காக வக்பு செய்தேன். இதனை ஆரம்பித்த போது பெரும்பான்மையின மக்களால் பெரும் தொல்லைகள் ஏற்பட்டன. பொலிஸாரின் சமரச முயற்சி, வழக்கு விசாரணை என்ற அடிப்படையில் பள்ளிவாசலுடன் குர்ஆன் மதரஸாவும் இயங்கி வந்தன. 

இந்தச்சசந்தர்ப்பத்தில் கண்டியில் மிகப் பிரபரமான தனவந்தர் ஒருவர்  இந்தப் பள்ளியை முழுமையாக் கட்டி பராமாரிப்பதற்காக உதவ முன்வந்தார். அதனை தன்னால் செய்ய முடியும் என்ற வகையில் நான் அதற்கு இணங்கவில்லை. இந்தப் பள்ளிவாசல் தொடாபாக என்னால் முழுமையாக இயங்க முடியாமையின் காரணமாக கண்டி லயின் பள்ளிவாசலின் கீழ் நிர்வகிப்பதற்காக அஷஷய்க் உமர்தீன் அவர்களிடம் ஒப்படைத்தேன். அந்தப் பள்ளிவாசலை வக்பு சபையின் தனியாக பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் என்பதுடன் இந்த பள்ளிவாசல் தொடாபான விபரங்கள் தகவல்கள் விளக்கங்கள் யாவும் அவரே  முன்னெடுத்துள்ளார் என்று கூறுவது குறிப்பிடத்தக்கது என்று அவர் தொவித்தார்

அஷஷய்க் உமரிதீன் கருத்துத் தெரிவிக்கையில்,

அந்தப் பள்ளிவாசல் லயின் பள்ளிவாசலுக் கீழ்தான் இயற்குகின்றன. பாரிஸ் ஹாஜியாரினால் வக்கு செய்யப்பட்ட இந்தக் காணியை  தற்போது அதனை வக்கு சபையில் பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

  1. im very sorry my dear alhaj-Farees.if my comments hurt u please forgive me. but one thing 4 jaffna muslim u should publish the true news after conforme strongly .Mr.farees dont worry about it.Allah will shower al His Rahmath 4 u & ur father in both worlds.insaAllah i make dua 4 u & ur father.

    ReplyDelete

Powered by Blogger.