தந்தையை இழந்த சிறார்களுக்காக வாழ்வாதார நிதியுதவி
(இக்பால் அலி)
ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவினால் தந்தையை இழந்த சிறார்களுக்காக வழங்கப்படும் வாழ்வாதார நிதியுதவி வழங்குதல் மற்றும் அவர்களுக்கான நோன்புப் பெருநாள் புத்தாடைகள் வழங்கும் வைபவம் பறஹகதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி பள்ளிவாசலில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் பொதுச் செயலாளர் ஏ. எல். கலிலுர்ரஹ்மான் சிறுவன் ஒருவனுக்கு நோன்புப் பெருநான் புத்தாடைப் பொதி ஒன்றை வங்கி வைப்பதையும் அருகில் கலாபூசணம் செய்னுதீன் எஸ். பரீத் நிற்பதையும் கலந்து கொண்ட விதவைத் தாய்மார்களையும் படங்களில் காணலாம்.

Post a Comment