Header Ads



ஜமாத் இ இஸ்லாம் கட்சி தலைவருக்கெதிரான முக்கிய தீர்ப்பு

பாகிஸ்தானுக்கு எதிரான வங்கதேச விடுதலைப்போர் 1971-ம் ஆண்டு நடந்தபோது பெரும் வன்முறை ஏற்பட்டது. குலாம் அசாம் என்ற இஸ்லாமியத் தலைவர் மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த காலக்கட்டத்தில் ஜமாத் இ இஸ்லாம் கட்சியின் பாகிஸ்தானின் கிழக்குப் பிரிவின் தலைவராகவும், மாகாண அமைச்சராகவும் அசாம் இருந்து வந்தார்.

மூன்று மாதங்களுக்கு முன், இவர் மீதான வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஏடிஎம் பஸ்லே கபீர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, முஸ்லிம் ஜமாத் கட்சி நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. தினர்.

குலாம் அசாமிற்கு தற்போது 91 வயதாகிறது. அவர் மீது சாற்றப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு தண்டனை அளிக்கப்படும் என்ற கருத்து நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று அங்கு கலவரம் வெடித்தது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வங்க தேச அரசு அதிகரித்துள்ளது.

No comments

Powered by Blogger.