Header Ads



துருக்கியில் இராணுவத்தின் அதிகாரங்கள் குறைப்பு

(Tn) துருக்கி இராணுவத்தின் அரசியல் செல்வாக்கை குறைக்கும் வகையில் அந்நாட்டு பாராளுமன்றத்தில் புதிய திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

துருக்கி அரசியலமைப்பில் துருக்கி குடிரசை பாதுகாக்கும் பொறுப்பு அந்நாட்டு இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இந்த சட்டம் அந்நாட்டில் இராணுவ சதி புரட்சி ஏற்படுவதை நியாயப்படுத்தி வந்தது. ஆனால் புதிய சட்ட திருத்தத்தின்படி இராணுவத்தின் பிரதான பணி வெளிநாட்டு அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாப்பது என விபரிக்கப்பட்டுள்ளது.

துருக்கியின் மதச் சார்பற்ற மரபை பாதுகாக்கும் அமைப்பாக இராணுவம் கடந்த காலங்களில் செயற்பட்டு வந்துள்ளது. இதனை காரணம் காட்டி 1960 மற்றும் 1980 காலப் பிரிவுக்குள் துருக்கியில் மூன்று இராணுவ சதிப் புரட்சி இடம்பெற்றுள்ளன. எனினும் இஸ்லாமிய பின்னணி கொண்ட ஆளும் பிரதமர் ரிசப் தய்யிம் எர்டொகனின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து துருக்கி இராணுவத்தில் பல சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இந்த காலப் பிரிவில் பல இராணுவ தளபதிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்கள் அரசை கவிழ்க்க சதி செய்த குற்றச்சாட்டில் சிறைப்படுத்தப்பட்டனர்.

துருக்கியில் கடந்த ஜூன் தொடக்கம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

1 comment:

  1. Masha Allah great step towards islamic democracy! Turkish PM is our real Hero. Barakallah Erdogan!

    ReplyDelete

Powered by Blogger.