'ஓட்டமாவடியில் மதீனா இஸ்லாமிய பல்கழைக்கழக பட்டதாரிகளினால் கருத்தரங்கு'
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
மட்டக்களப்பு ஓட்டமாவடி கல்விக் கோட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் புனித ரமழான் மாத்தை முன்னிட்டு மதீனா இஸ்லாமிய பல்கழைக்கழக பட்டதாரிகளினால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்ட எட்டு நாட்கள் கொண்ட இஸ்லாமிய கருத்தரங்கில் கலந்து கொன்டு போட்டி பரீட்சையில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசீல் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மட்ஃமீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பின் அனுசரணையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசார உத்தியோகத்தர் மௌலவி ஏ.எல்.பீர்முகம்மத் காஸிமி மட்-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் அதிபர் ஐ.எல்.மஃறூப்,பிரதி அதிபர் ஏ.எம்.அன்வர், கல்குடா ஜம்இய்யதுல் தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பின் கல்விபிரிவுக்கான இணைப்பாளர் ஆசிரியர் முகைதீன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களையும்,பரிசுப்பொதிகளையும் வழங்கி வைத்தனர்.



Post a Comment