இலங்கையில் முதற்தடவையாக பொலீஸ் மோப்ப நாய்களின் இனப்பெருக்க மத்திய நிலையம்
இலங்கையில் முதற்தடவையாக பொலீஸ் மோப்ப நாய்களின் இனப்பெருக்க மத்திய நிலையம் ஒன்றை அமைக்க பொலீஸ் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலீஸ் சோதனை நடவடிக்கைகளின் போது ஈடுபடுத்தப்படும் இந்த உயர் ரக பொலீஸ் மோப்ப நாய்கள் இதுவரை காலமும் வெளிநாடுகளிலிருந்தே இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதற்காக வருடாந்தம் கோடிக்கான ரூபாய் பணம் செலவிடப்படுகிறது .
ஜேர்மன் நெதர்லாந்து ஒல்லாந்து ஹங்கேரியா ஆகிய நாடுகளிலிருந்தே இலங்கைக்கு இந்த உயர்ரக பொலீஸ் மோப்ப நாய்கள் கொண்டுவரப்படுகின்றன.கடைசியாக 2011ஆம் ஆண்டில் நெதர்லாந்திலிருந்து நூறு நாய்கள் கொண்டுவரப்பட்டன. இதற்காக செலவிட்ட தொகை 700லட்சம் (ஏழு கோடி ரூபா) ரூபாவாகுமென பொலீஸ் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இந்த நாய்களின் இனப்பெருக்க மத்திய நிலையம் ஒன்றை இலங்கையில் அமைப்பதன் மூலம் இத்தகைய பெருமளவு பணத்தை மீதப்படுத்த முடியும் என்ற நோக்கத்திலேயே பொலீஸ் திணைக்களம் அந்த முடிவை எடுத்துள்ளது.
நுவரெலியாவில் இத்தகைய பொலீஸ் மோப்ப நாய்களுக்கேற்ற காலநில நிலவுவதால் நுவரெலியாவிலேயே இந்த இனப்பெருக்க மத்திய நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் இந்த நாய்களின் இனப்பெருக்க மத்திய நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் ஒரு சோடி நாய்களின் மூலம் சுமார் 14முதல் 16 வரையிலான நாய்க்குட்டிகளை எதிர்பார்க்க முடியும் என பொலீஸ் திணைக்களம் நம்பிக்கை தெரிவிக்கின்றது.
இலங்கையில் பொலீஸ் மோப்ப நாய்களின் சேவைக்கு சுமார் 65வருடங்களாகும் இக்கால பகுதியில் பொலீஸ் நாய்கள் போதை பொருள் தேடுதல் நடவடிக்கை ,வெடி மருந்து சோதனை ,குற்றவாளிகளின் தடயங்களை கண்டுபிடித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்த நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Nlk

Post a Comment