Header Ads



முஸ்லிம்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து இனச்சுத்திகரிப்பு செய்கிறது'

வடமாகாண முஸ்லிம்களின் நலன் குறித்தே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் போட்டியிடுவதாக வெளியிட்டுள்ள அறிக்கை வெகுளித்தனமானது என்று வவுனியா மாவட்ட இன நல்லறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார்.

வடக்கில் முஸ்லிம்களுக்கு கடந்த 20 வருட காலமாக இழைக்கப்பட்ட அநீதி குறித்து வாய்ப்பொத்திக் கொண்டு இருந்த இவ்வாறான அமைப்புக்கள் தேர்தல் வந்ததும்,பொட்டணி வியாபாரிகள் போன்று ஓடிவந்து வடமாகாண முஸ்லிம்கள் மீது அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளதானது.போலி நாடகம் என்பதை எம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.

நல்லாட்சிக்கான கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் நஜா முஹம்மது வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அப்துல் பாரி மேலும் குறிப்பிடுகையில்,

வடக்கில் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னணியில் அன்று இருந்தவர்களில்,புலிகளுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் என்பதை யாவரும் அறிவார்கள்.அவர்களின் ஆட்சி முடிவடைந்த போதும் முஸ்லிம்களை இனச்.சுத்திகரிப்பு செய்யும் வேலையில் தொடர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஈடுபட்டுவருவதை கடந்த காலத்தில் தொடராக அவர்களினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிக்கைகள் மூலம் புலப்படுகின்றது.இந்த அறிக்கை வெளிவந்த போதும் கூட இன்று முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க புறப்பட்டுள்ள நல்லாட்சிக்கான அமைப்பினர் எதை செய்தார்கள்,தமிழ் கூட்டமைப்புடன்,அல்லது முஸ்லிம் தலைமைகளுடன்,பாதிக்கப்பட்ட சமூக தலைமைகளுடன்  எத்தனை தடவை பேச்சுக்களை நடத்தினார் என்று கேட்க விரும்புகின்றேன்.

ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் கூட தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும்,மக்கள் பிரதி நிதிகளும் முஸ்லிம்கள் மீது நடத்தும் தாக்குதல்கள் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.வடக்கில் இன்று முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம் பெறுகின்றது.அதற்கு தடையாக இருப்பவர்கள் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தான்,இவர்களுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்தப் போவதாக சகோதரர் நஜா முஹம்மத் கூறுவதானது.யதார்த்தம் எதுவென்று தெரியாமல் அமைச்சர் றிசாத் பதியுதீன் முன்னெடுக்கும் பணியினை பின்னடையச் செய்யும் ஒன்றாக காணத் தோன்றுகின்றது.மற்றது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நல்லாட்சிக்கான அமைப்பு உடன்படிக்கை செய்யப் போகின்றது என்று தெரிவித்துள்ளது.மற்றுமொரு பெரும் துரோகத்தனமாகும்.முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் இக்கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம் வழங்கும் அநியாயத்தை செய்ய முன்வந்துள்ளமை பெரும் விபரீதங்கள ஏற்படுத்தும்.

மன்னாரிலும்,முல்லைத்தீவிலும்,ஏன் வவுனியாவிலும் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களில் முஸ்லிம்களை மீள்குடியேறவிடாது முன்னெடுத்துவரும் வேலைகள் குறித்து நல்லாட்சி இயக்கத்துக்கு என்ன தெரியும்,வவுனியாவில் உள்ள சாளம்பைக்குளம் முஸ்லிம் கிராமம் இன்று சோபாள புளியங்குளம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை.முஸ்லிம் கிராமங்கள் பறிபோகும் அபாயம் இல்லையா?மாகாண சபையில் கூட்டமைப்பின் ஆட்சிவரும் போது,அதிகாரமில்லாத தற்போதைய தமிழ் கூட்டமைப்பு எம்.பிக்கள் அதிகாரத்துடன் வந்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றீர்கள்.எங்கேயோ இருந்து கொண்டு வடக்கு மக்களின் உள்ளத்தை புன்படுத்தும் வகையில் அறிக்கைகளை விடுவதானது வடக்கில் வாழும் முஸ்லிம்களாகிய எமது இருப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகும் என்பதை புரிந்து கொண்டு,இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர்ந்து கொண்டு முஸ்லிம்களுக்கு இழைக்கும் அநியாயத்தை நிறுத்த வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும் என்றும் வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றித்தின் தலைவர் அப்துல் பாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

4 comments:

  1. Kattankudy Rahmathulla Neengal Ungalukku Nanrahe Warrttaihal Warum.Atathahe Nonthupone Itayangaluden Wilaiyaade Wenduma......

    ReplyDelete
  2. vavniya restiboard therivin poathu neengal engirunteerhal.

    ReplyDelete
  3. பேரன்புமிக்க வாக்காளப் பெருமக்களே..

    நொந்துபோன இதயங்களுடன் என்னை விளையாட வேண்டாம் என்று முன்கூட்டியே விண்ணப்பம் செய்கின்றார்கள்.

    அவர்களைப்போல் காலமெல்லாம் வீண் விளையாட்டுக்களில் ஈடுபடுபவனல்ல நான்.

    சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லிவிடுவதுதான் எனது வேலை.

    தமிழ்த் தலைமைகளுடன் முஸ்லிம்கள் ஒன்றிணைவது துரோகத்தனம் என்பதை இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் என்பவர் சொல்வது எவ்வளவு கேலிக்கிடமானது என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இவர் சிங்கள - முஸ்லிம் இன ஒன்றியத்தின் தலைவராக இருக்க வேண்டியவர்.

    தமிழ்த் தலைமைகளின் அரசியல் பாசறையில் விளைந்தவர்தான் இன்றைய 'முஸ்லிம் அடுப்புக்கல்' அரசியல் தலைமைத்துவங்களின் மதிப்புக்குரிய தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களாகும்.

    மாத்திரமல்ல புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தவர்தான் இன்றைய மு.கா.வின் தலைவராகும்.

    கல்முனை அகமதும், காரியப்பரும், பொத்துவில் மஜீதும், மூதூர் முகம்மதலியும் இவ்வாறுதான் தமிழ்த் தலைமைகளுடன் ஒன்றித்து அரசியல் செய்தவாகள்.

    இவர்களெல்லாம் துரோகிகளாக சகோதரர் அப்துல் பாரியின் கண்களுக்குத் தெரியவில்லை. இப்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கபுத்திஜீவிகள் குழுவொன்று இத்தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து வடக்கு கிழக்கு தமிழ் - முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் காண முற்படும்போதுதான் துரோகத்தனமாகத் தெரிகிறது.

    புள்ளடி போடும் பொன்னான சீட்டுக்களைக் கைகளில் வைத்திருக்கும் வடபுல முஸ்லிம்களே..!

    புலிகள் இருக்கும்போது முஸ்லிம்களான நாம் மாத்திரமல்ல இந்த நாடே அச்சப்பட்டு வாய் பொத்தி கைகட்டி நின்றது.

    நான்கு வருடங்களுக்கு முன் அவர்கள் மண்ணில் சரிந்த பின்னர் நாம் எதிர்பார்த்த அமைதியம், மீள் குடியேற்றமும், விலைவாசிக் குறைப்பும் ஏற்பட்டு விட்டதா? என்ன செய்கிறார்கள் அரசுக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் எமது முஸ்லிம் சமூகத் தலைமைகள்?

    அரச பலத்துடன் அரசியல் ஆதிக்கத்துடன் எமது சகோதரர்களை குடியேற்றிவிட்டால் அவர்கள் பாதுகாப்புடன் எக்காலமும் குடியிருந்து விட முடியுமா?

    அயலவனைப் பகைத்துக் கொண்டு எங்களால் எத்தனை காலத்துக்கு நிம்மதியாக எமது சொந்த இடங்களில் குடியிருக்க முடியும்? கடலில் உப்பைக் கரைப்பது போல் காட்டில் எமது மக்களை இணுவ பொலிஸ் பந்தோபஸ்துடன் குடியமர்த்துவது நிரந்தரமான மீள்குடியேற்றமாகி விடாது.

    மாகாண ஆட்சிப் பலமுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி சரியாகவும், முறையாகவும் அவர்களால் நாங்கள் உள்வாங்கப்பட்டு மீளக் குடியமர வேண்டும். அப்போதுதான் எமக்குள்ள அத்தனை உரிமைகளும், வசதி வாய்ப்புக்களும் கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

    இன்று உங்களின் வாக்குகளைப் பறிப்பதற்காக ஆயிரததெட்டு உதவி நடவடிக்கைகளையும், பதிவுகளையும் இவர்கள் செய்வார்கள்.

    எல்லாம் 'கோடிகளை உழைக்கும் குறிக்கோளுடன்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.அந்த இலட்சியத்திற்காகவே பல இலட்சங்களை அள்ளியிறைக்கப் போகிறார்கள். அப்புறம் மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மகா வித்தியாலயம்போத்தான் உங்களின் எதிர்காலமும் இருக்கும் எனக் கூறி தலைவர் துண்டினைக் கையளித்து பேச்சை முடிக்குமாற கேட்டுக் கொண்டதால் இத்தோடு விடைபெறுகின்றேன்

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  4. இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் கக்கும் துவேசத்தைப் பாருங்கள். தயவு செய்து முதலில் உங்களது ஒன்றியத்தின் பெயரை மாற்றிவிட்டு கருத்துச் சொல்லுங்கள். கையாலாகாத முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் இன்று ‌தங்களது அரசியல் அதிகாரத்தால் இலங்கை முஸ்லிம்களுக்கு செய்ய முடியாதவற்றை நல்லாட்சிக்கா மக்கள் இயக்கத்தின் கீழான அரசியல் கூட்டணி செய்ய முயற்சிப்பதை ஜீரணிக்க முடியாத பாரி, ஒப்பாரி வைக்கிறார்.

    ReplyDelete

Powered by Blogger.