''எமது சமூகத்தை அழிக்க நினைத்த புலிப் பயங்கரவாதிகள் இன்று இல்லை''
வடபகுதி முஸ்லிம்களுக்கு நடந்த நிலை இனி இந்நாட்டின் எந்தப்பகுதி முஸ்லிம்களுக்கும் நடைபெறக் கூடாது என்று ஏறாவூர் நகர சபையின் பிரதி நகர முதல்வர் எம்.ஐ.எம்.தஸ்லீம் தெரிவித்துள்ளார். ஏறாவூர் எல்லைக்கிராமமான றூபி முகைதீன் கிராமத்தில் தார் அல் பிர் அமைப்பினால் கிணறுகள் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
1990 ஆண்டு ஏறாவூரில்; பயங்கரவாதிகளால் இரவோடு இரவாக பெண்கள் என்றும்பாராது குழந்தைகள் என்றும்பாராது அப்பாவி முஸ்லிம்கள் வெட்டியும் சுட்டும் கொலைசெய்யப்பட்டு ஸஹீதாக்கப்பட்டபோது கிழக்கில் இருந்த வீராப்புப் பேசுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் கொழும்பிலே இருந்து கொண்டு இந்நிலை கேள்விப்பட்டு பதுங்கிய போது அன்று எதுவித அரசியல் அதிகாரமும் அற்றிருந்த இந்த அலி ஸாஹிர் மௌலானாவே ஓடோடி வந்து இந்த ஜனாஸக்களை நல்லடக்கம் செய்வதற்கான கபன் துனிகளை தந்ததை இந்த சமூகம் இலகுவில் மறந்துவிட முடியாது. அத்தோடு அன்றைய பாதுகாப்பமைச்சர் ரஜ்ஜன் விஜரத்னவை உடனடியாக வரவழைத்து இந்த ஊரினுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையும் நாம் மறக்க முடியாது.
அன்று அவ்வாறு எமது சமூகத்தை அழிக்க நினைத்தவர்கள் இன்று இல்லை. இதேவேளை நான் இன்னுமொரு விடயத்தை அவசியம் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது. வடபகுதியில் இருந்த முஸ்லிம்கள் இரவோடு இரவாக உடுத்த ஆடைகளோடு, சொப்பின் பேக்குகளோடும் தாம் பிறந்து வளர்ந்த தாய்மண்னை விட்டும் புலிகளால் விரட்டப்பட்டார்கள் இவ்வாறு வடபகுதி முஸ்லிம்களுக்கு நடந்த நிலை இனி இந்நாட்டின் எந்தப்பகுதி முஸ்லிம்களுக்கும் நடைபெறக் கூடாது என்பதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் அவதானமாக இருக்க வேண்
நான் இதை ஏன் சொல்கின்றேன் என்றால் மதவாத, இனவாத சக்திகளால் இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு இதைவிட பாரிய அநீதி இளைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலை தடுத்து நிறுத்தப்படவேண்டும் இதற்காக நாம் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இந்த ரமழான் காலத்தில் பிராத்திக்க வேண்டும். இங்கிருக்கின்ற ஒவ்வொரு தாய்மாரும் ஒவ்வொரு தொழுகையிலும் முந்தானையேந்தி பிரார்த்திக்க வேண்டும்.
எனவேதான் எமது முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட்டு இது விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒரு முடிவினை பெற்றுத்தர வேண்டும் என்பது காலத்தின் தேவையாக இருக்கின்றது. இல்லாது போனால்;; இந்த நாட்டில் எமது முஸ்லிம் சமூகத்தின் இருப்பும் கேள்விக்குறியாகிவிடும் எனவே யா அல்லாஹ் இந்நிலையில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தருள்புரிவாயாக ! ஆமீன் !!

Post a Comment