செய்திக்கு பலன்
(யு,எல்,எம், றியாஸ்)
கடந்த ஜூன் மாதம் 14ம் திகதி ஜப்னா முஸ்லிம் இணையத்தில் வெளியான சம்மாந்துறை சென்னல் கிராமம் - 2ன் மஸ்ஜிதுல் அப்ரார் வீதியின் அவலநிலை தொடர்பாக வெளியான செய்தியை அடுத்து சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ,எம்,எம்,நௌசாதின் முயற்சியின் பயனாக இன்று 30.07.2013ல் அவ்வீதியை கொன்க்ரீட் வீதியாக செப்பனிடும் நடவடிக்கைகள் ஆரம்பம்.
தயட்ட கிருல அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வீதி 30 இலட்சம் ரூபாய் செலவில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் பி,எம்,எம், றியால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகான சபை உறுப்பினர் எம்,எல்,ஏ, அமீர் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்திப் பணியை ஆரம்பித்தி வைத்தார்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ,எம்,எம்,நௌசாத், உதவி தவிசாளர் ஏ,கலீலுல் ரகுமான், மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேவளை சென்னெல் கிராம மக்கள் இவ்வீதி தொடர்பாக செய்தி வெளியிட்ட ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நன்றி தெரிவித்தனர்.


Post a Comment