முஸ்லிம் பள்ளிவாசல்கள் பௌத்த குருக்களால் தாக்கப்பட அரசாங்கம் ஆதரவு - மங்கள
வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசாங்கத்துக்கு பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்த வழங்கியுள்ள அனுமதி ஆசியாவில் அராஜக ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாயத்தின் விழுமியங்களை இலங்கை அரசாங்கம் மதிக்கவில்லை. அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்டு வருகிறது என்று மங்கள சமரவீர, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளுக்கு நாள், மனித உரிமை நிலவரங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை. நீதித்துறையின் இடமாற்றங்கள் மற்றும் பதவிகள் யாவும் அலரிமாளிகையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன.
கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் பல பௌத்த மதக்குருக்களால் தாக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசாங்கத்தின் ஆதரவு காட்டப்படுகிறது.
இந்தநிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடப்பதற்கு முன்னர் உறுதிப்படுத்த வேண்டும் என்று கமலேஸ் சர்மாவிடம், மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
.jpg)
How to trust this PONSI KUTTY
ReplyDelete