சோமாலிய ஆயுததாரிகளிடம் பாதுகாப்பாக உள்ள இலங்கையர்கள்..!
சோமாலிய ஆயுததாரிகளிடம் சிக்கிய கப்பலில் இருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 15 பேரும் உயிருடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய கொடியுடனான இந்த கப்பல், கடந்த 2010ம் ஆண்டு நொவம்பர் மாதம் சோமலிய ஆயுததாரிகளிடம் சிறைபிடிக்க்பபட்டது.
இந்த கப்பல் கடந்த வாரம் சோமாலியாவின் ஹோப்யோ நகரை அண்மித்த கடற்பகுதியில் மூழ்கியது.
இதில் கப்பலில் இருந்த 15 பேரும் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
எனினும் குறித்த இலங்கையர்களில் மூன்று பேருக்கு மாத்திரம் இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த அனுமதித்தாகவும், அவர்களால் ஏனைய 11 பேரும் உயிருடன் இருக்கின்ற தகவல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Sfm

Post a Comment