கட்டார் நாட்டின் உதவியுடன் வடமாகாணத்தில் 'தோகா' என்ற கிராமம்
கத்தார் உள்நாட்டு அமைச்சினால் இலங்கையர்களுக்கு இப்தார் ஜூலை 19 வெள்ளியன்று தோஹா கட்டார் நாட்டில் அல் அரபி விளையாட்டு கழக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இப்தார் வைபவத்தில் 1500 க்கும் மேற்பட்ட கட்டாரில் வாழும் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
இந்த இப்தார் வைபவம் கட்டார் நாட்டின் உள்நாட்டமைச்சும் "RAF "இஸ்லாமிய அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் , இந்த பிரமாண்டமான நிகழ்வில் விசேட பேச்சாளராக ஜாமியா நளீமியாவின் பணிப்பாளர் அல் சேக் அகார் முஹம்மது அவர்கள் கலந்து கொண்டு விசேட பயானும் நிகழ்த்தினார். விசேட விருந்தினராக இலங்கைக்கான தூதுவரின் பிரதிநிதியாக உதவி தூதுவர் வணசேகர கலந்து சிறப்பித்தார்.
வரவேற்பு உரை அமைசின்சார்பாக போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரி அல் அனிசி அவர்கள் நடாத்தினார்கள் இவர் உரையில் அந்நாட்டு போக்குவரத்து சட்டங்கள் சம்பந்தமான அறிவுறுத்தல்களையும் வழங்கிவைத்தார் அத்தோடு RAF இஸ்லாமிய அமைப்பின் பணிப்பாளர் அலி யூசுப் அல்கராவி அவர்களும் அந்நிறுவனம் சம்பந்தமான விளக்கமளித்த அவர் இலங்கையில் கட்டார் நாட்டின் உதவியால் வட மாகாணத்தில் தோகா என்ற கிராமம் ஒன்று அமைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார் இவர்களின் உரைகளை இலங்கையை சேர்ந்த அல்ஹாஜ் MSM .றிஸ்மி அவர்கள் தமிழில் மொழிபெயர்த்து வைத்தார்,சகல ஏற்பாடுகளும் SLMMQ என்ற அமைப்பு ஒத்துழைப்பு வழங்கியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
கட்டாரிலிருந்து "SLMMQ "

Post a Comment